சிறுமிகளை கடத்தி பிச்சைக்காரிகளாக்கிய கும்பல்
சென்னை தஞ்சாவூர்:
சென்னையிலிருந்து கடத்தப்பட்டு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் கோவில்களில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட 2 மாணவிகள் தப்பி வந்தனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள சண்முகராயன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் வங்கி அதிகாரியாக உள்ளார்.இவரது மகள்கள் பிரியா, கவிதா ஆகியோர் மண்ணடியில் ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இருவரும் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு வேனில் வந்தவர்கள் உங்களது அப்பா வேனில்அடிபட்டு விட்டார். மருத்துவமனைக்கு வாருங்கள் என்றனர்.
இதைக் கேட்டதும் பதறிப் போன இரு மாணவிகளும் வேனில் ஏறினர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில் வேன் நேராகசென்னையை விட்டு வெளியே வந்தது.
இதனால் மாணவிகள் வேனை நிறுத்துமாறு அலறினர். ஆனால் வேனில் இருந்தவர்கள் கொலை செய்து விடுவோம் என்றுமிரட்டியதையடுத்து அமைதியாகி விட்டனர்.
இந்த இருவரும் கும்பகோணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒரு கோவில் முன் வேனை நிறுத்தி இரு மாணவிகளையும் கீழேஇறக்கியது அந்தக் கும்பல். அங்கு மாணவிகளை பிச்சை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
பின்னர் இருவரையும் ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் கொண்டு சென்றனர். அங்குள்ள பெரிய கோவில் முன் பிச்சை எடுக்க வைத்துள்ளனர்.அப்போது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு மாணவிகளும் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.
தஞ்சாவூர் பஸ் நிலையம் வந்த அவர்கள் அழுதுகொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளனர். அப்போது அங்கு ரோந்துவந்த போலீஸாரை அணுகி நடந்தததைக் கூறியுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றனர்.
அங்கிருந்து மாணவிகளின் வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சண்முகம் தம்பதியினர் உடனடியாக தஞ்சாவூர் சென்று இருமகள்களையும் மீட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications