நெய்வேலி பேரணிக்கு போலீசார் அனுமதி
நெய்வேலி:
நெய்வேலியில் திரையுலகத்தினர் திரண்டு நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்கு தமிழக காவல்துறைஅனுமதி கொடுத்துள்ளது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நெய்வேலி சென்ற குழுவினர் இந்த அனுமதியைப்பெற்றுள்ளனர்.
காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள"தமிழர்கள் நல பாதுகாப்பு அணி" சார்பில் நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு 12ம் தேதி மாபெரும் பேரணிமற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதற்கான காவல்துறை அனுமதி மற்றும் திரையுலகினருக்கு பாதுகாப்பு ஆகியவற்றைக் கோருவதற்காக பாரதிராஜாதலைமையில் ஒரு குழு நெய்வேலி சென்றது.
இந்தக் குழுவில் வக்கீல்கள் சிவா, புருஷோத்தமன், சேது, விக்டர், வெங்கடேஷ், மகாதேவன், லால்உள்ளிட்டவர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் நெய்வேலி நகரிய டி.எஸ்.பி. முருகையாவைச்சந்தித்து தங்களது போராட்டத்திற்கு அனுமதி தருமாறும், பாதுகாப்பு கொடுக்குமாறும் கோரி மனு கொடுத்தனர்.
அதனை பரிசீலித்த முருகையா அவர்களிடம் கூறுகையில்,
நெய்வேலி புது நகர் காமராஜர் சிலை அருகே பேரணி கிளம்பலாம். அங்கிருந்து தொழிலாளர் முன்னேற்ற சங்கரவுண்டானா வழியாக அம்பேத்கர் சதுக்கம் வரை நடந்து செல்லலாம்.
அதன் பிறகு அங்கிருந்து வாகனங்களில் கிளம்பி, நெய்வேலி இரண்டாவது அனல் மின்சார நிலைய வாசலுக்குச்செல்ல வேண்டும். அங்கு பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
முக்கிய கலைஞர்கள் பேசியதற்குப் பிறகு, 6 அல்லது 7 பேர் கொண்ட குழு மட்டும் மின் நிலைய பொறுப்புஇயக்குநர் சீனிவாசனை சந்தித்து மனு அளிக்கலாம்.
அதன் பிறகு அனைத்துக் கலைஞர்களும் மீண்டும் சென்னை திரும்பி விட வேண்டும். ஊர்வலத்தில் கட்சிக்கொடிகளுக்கு அனுமதி இல்லை. கட்சிக் கொடிகளை யாரும் எடுத்து வர வேண்டாம் என்று பாரதிராஜா அறிவுறுத்தவேண்டும் என்று கூறினார் முருகையா.
காவல்துறையினரின் ஆலோசனையை பாரதிராஜாவும் மற்றவர்களும் ஏற்றுக் கொண்டனர். இதேபோல, கடலூர்மாவட்ட எஸ்.பி. ராஜீவ் குமாரையும் நடிகர் சங்கப் பிரதிநிதிகள் குழு நாளை சந்தித்து அனுமதி பெறவுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications