தொடங்கியது இறுதிக் கட்ட காஷ்மீர் தேர்தல்: தீவிரவாதிகள் சுட்டு 2 ரிசர்வ் போலீசார் பலி
காஷ்மீர்:
காஷ்மீரில் இன்று காலை நான்காவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் தொடங்கிய நிலையில், தோடா நகரில்உள்ள ஒரு வாக்குச் சாவடி மீது தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்தியதில் 2 பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கியது.
காஷ்மீரிலேயே இங்கு தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் என்பதால் தோடா மாவட்டத்தில் வரலாறுகாணாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 18,000 பாதுகாப்புப் படையினர்குவிக்கப்பட்டிருந்தனர்.
தோடா நகரிலும் ஏராளமான மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தோடா நகரில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு போலீஸ்சீருடையில் வந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன், கையோடு கொண்டு வந்திருந்த ஒரு கிரனைட் குண்டைவாக்குச் சாவடிக்குள் வீசி எறிந்தான்.
பின்னர் சற்றும் தாமதிக்காமல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசாரை நோக்கிஇரண்டு தீவிரவாதிகளும் சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இந்தத் தாக்குதலால் சிறிது தடுமாறிய போலீசார் உடனடியாகப் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் வரை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ்காரரும், ஒரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். குண்டுக் காயமடைந்தநான்கு போலீசாரில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மற்றொரு தீவிரவாதி தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இந்த இரண்டுதீவிரவாதிகளும் பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என்றுதெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் அந்த வாக்குச் சாவடியில் சிறிது நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. பின்னர் காலை 9 மணிக்குமேல் மீண்டும் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
இதற்கிடையே தோடா மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications