நெய்வேலி வரத் துவங்கிய திரையுலக கலைஞர்கள்
நெய்வேலி:
திரையுலகக் கலைஞர்களின் அனைத்து பஸ்களும் இன்னும் நெய்வேலி வந்து சேரவில்லை. இதனால் விஜய்காந்த் மற்றும்பாரதிராஜா தலைமையிலான குழுவினர் நெய்வேலியில் காத்துக் கொண்டுள்ளனர். அனைவரும் வந்தவுடன் தான் பேரணிதொடங்கும் என்று பாரதிராஜா அறிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விஜயகாந்த் தலைமையில் இந்த ஊர்வலம் நடக்கிறது. நெய்வேலியில் உள்ளவடலூர்-பண்ருட்டி சாலையில் வடக்குத்து என்ற இடத்திலிருந்து ஊர்வலம் தொடங்கும்.
நடிகர்கள், நடிகைகள் திறந்த லாரிகளில் ஊர்வலமாக செல்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மற்ற கலைஞர்கள்நடந்து செல்கிறார்கள். இதற்காக பல லாரிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 2 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து என்.எல்.சி. ஆர்ச் கேட்டை அடைந்ததும் நெய்வேலி லிக்னைட்கார்பரேஷன் எல்கைக்குள் நுழைகிறார்கள.
இந்த இடம் வரை மட்டும்தான் பொதுமக்கள், ரசிகர்கள் கலைஞர்களைப் பார்க்க முடியும். அதன் பிறகு என்.எல்.சிதலைமையக்தை கலைஞர்கள் அடைகிறார்கள்.
அங்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பின்னர் கலைஞர்கள் பேசுகிறார்கள். அதன் பிறகு என்.எல்.சி. தலைவர்ஜெயராமனிடம் கலைஞர்கள் மனு கொடுக்கிறார்கள்.
கலைஞர்களைக் காண நெய்வேலியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ரசிகர்களர் திரண்டுள்ளனர். பல்வேறுஅமைப்பினரும் கலைஞர்களுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்.
போராட்டத்திற்கு 6000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
முன்னதாக கடலூரை அடைந்த நடிகர், நடிகைகள் அங்கு பிற்பகல் உணவருந்திவிட்டு உடனே நெய்வேலி சென்றனர்.
பாதி பஸ்கள் தான் நெய்வேலியை அடைந்துள்ளன. அனைத்து பஸ்களும் நெய்வேலி வந்து சேரவில்லை. இதனால் விஜய்காந்த்மற்றும் பாரதிராஜா தலைமையிலான குழுவினர் நெய்வேலியில் காத்துக் கொண்டுள்ளனர்.
நடிகர் நடிகைகளைக் காண லட்சக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளனர். காலி குடங்களுடன் ஆயிரக்கணக்கான பெண்களும்வந்துள்ளனர். இவர்களும் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஸ்பெஷல் கோஷம்:
நெய்வேலிக்கு வந்து சேர்ந்துவிட்ட துணை நடிகர்கள், நடிகைகள், பிற திரைப்டத்துறை சங்கக் கலைஞர்கள் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து கர்நாடகத்துக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவண்ணம் உள்ளனர்.
அதில் மிகவும் ரசிக்கும் விதத்தில் கோஷம்,
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா...
கெஞ்சிக் கேட்டும் தரவில்லையே எஸ்.எம். கிருஷ்ணா...
போராட்டத்துக்கு வந்துள்ள கலைஞர்கள்:
நடிகர்கள் விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், நெப்போலியன், விஜய், அஜீத், பிரசாந்த், முரளி, அர்ஜூன், வடிவேலு, செந்தில்,விஜயக்குமார், சிவக்குமார், விக்னேஷ், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், சந்திரசேகர், தியாகு, பாண்டு, அலெக்ஸ், சரத்பாபு, கரண்,நாசர், மணிவண்ணன், ராஜேஷ், ராஜசேகர், சூர்யா, வினு சக்ரவர்த்தி, பிரபுதேவா உள்ளிட்டோர்.
நடிகைகள் ஜோதிகா, மும்தாஜ், ரோஜா, மனோரமா, மீனா, விஜயலட்சுமி, ஷாலினி, அனுராதா, அவரது மகள் அபிநயா,சத்யபிரியா உள்ளிட்டோர்.
இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், ஆர்.சுந்தரராஜன், சரண், சீமான் உள்ளிட்டோர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications