அரசியல் பழிவாங்கல்: திமுக
சென்னை:
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனின் வீடுகளில்லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளதாக அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை-கோட்டூர்புரத்தில் இன்று சோதனையிடப்பட்ட துரைமுருகனின் வீட்டுக்குச் சென்றார் ஸ்டாலின்.மற்றொரு முன்னாள் அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகமும் துரைமுருகனின் வீட்டைப் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
கடந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்தே பழி வாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து விட்டது.
அதிலும் திமுகவினரைக் குறி வைத்து தான் அதிமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது.
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயந்துவிட மாட்டோம். எதையும் சந்திப்பதற்குத் தயாராகத் தான்இருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
போலீஸ் ஜீப்பை தாக்க முயன்ற திமுகவினர்
இதற்கிடையே காட்பாடியில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தமுயன்ற திமுகவினரை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
போலீசார் சோதனை செய்வது குறித்த தகவல் கிடைத்தவுடன் முன்னாள் வேலூர் மாவட்ட திமுக செயலாளர்முகம்மது சகி தலைமையில் ஏராளமான திமுக தொண்டர்கள் துரைமுருகனின் வீட்டின் முன்பாகக் கூடினர்.
சோதனையை முடித்து விட்டு ஒரு பிரிவு போலீஸார் வெளியே வந்து ஜீப்பில் ஏறிய போது, திமுகவினரில் சிலர்அதிமுக, முதல்வர் ஜெயலலிதா மற்றும் காவல்துறையினருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
பின்னர் போலீஸாரின் ஜீப்பை அவர்கள் மறித்தனர். சிலர் ஜீப்பைத் தாக்கவும் முயன்றனர். இதையடுத்து போலீஸார்லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications