ஆண்டிப்பட்டியில் பாட்டிலில் அடைத்து வீசப்பட்ட 11 சிசுக்கள்
தேனி:
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு அருகே குப்பைகளுக்கு மத்தியில் பாட்டில்களில்அடைத்து வீசப்பட்டிருந்த 11 சிசுக்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் அதுல்ஆனந்த்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி சுடுகாட்டுக்கு அருகே இந்த 11 பாட்டில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இது அந்தப் பகுதியையேபெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து விரிவான அறிக்கை தருமாறு மாவட்ட கலெக்டருக்குசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் தொகுதியில் இந்த சிசுச்கள் போடப்பட்டிருப்பதைப் பார்த்தால், விஷமிகளின் சதியாகக் கூடஇருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் மாதிரிக்காக (specimens) வைக்கப்பட்டிருக்கும் சிசுக்கள் இவைஎன்பதால் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் ஆய்வகங்களில் போலீஸார்தீவிர விசாரணை நடத்தினர்.
ஆனால் அங்கிருந்து எந்த specimen-னும் காணாமல் போகவில்லை என்று தெரியவந்துள்ளதாக மாவட்ட காவல் துறைக்கண்காணிப்பாளர் அமல்ராஜ் கூறினார்.
கைப்பற்றப்பட்ட 11 பாட்டில்களில் 2 பாட்டில்களில் ஆண் சிசுக்களும்,8 பாட்டில்களில் பெண் சிசுக்களும்இருந்தன. மற்றொரு பாட்டிலில் இருந்த சிசுவை அடையாளம் காண முடியவில்லை.
ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் சிசுக் கொலைகள் நடப்பது சர்வ சாதாரணம் என்பதுகுறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண் சிசுக்களைக் கொல்வதை இநத்ப் பகுதி கிராமத்தினர் ஒரு பெரிய விஷயமாகவேகருதுவதில்லை.
-->
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications