மழை நீரை வெளியேற்றாவிட்டால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காலியாகக் கிடக்கும் பிளாட்களில் மழை நீர் தேங்கியிருந்தால் அவற்றை வெளியேற்ற பிளாட் உரிமையாளர்கள்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னைமாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதார அதிகார டாக்டர் தங்கராஜ் கூறியதாவது:

பொது இடங்களில் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், வீடு கட்டாமல்காலியாக வைக்கப்பட்டுள்ள இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்தகொசுக்களினால் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது.

இதுவரை சென்னையில மட்டும் 426 பேருக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே காலி மனைஉரிமையாளர்கள் உடனடியாக இந்த தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும்.

தண்ணீரை பம்ப் செய்து சாலைகளில் விடக் கூடாது. அப்படிச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். லாரிகளைவாடகைக்குப் பிடித்து அதில் பம்ப் செய்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார் அவர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+