உடலையே கயிறாக மாற்றி வேனை இழுத்த கராத்தே வீரர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த கராத்தே வீரர் ஒருவர் தனது உடலையே கயிறாக்கி இரண்டுவாகனங்களை இழுத்துள்ளார்.

புவனகிரியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் ஒரு கராத்தே வீரர். தலை முடியால் பஸ்சை இழுப்பது, கைகளால்கற்களை உடைப்பது என சாகச செயல்களைச் செய்துள்ளார்.

இப்போது தனது உடலையே இரும்புக் கயிறாக்கி வாகனங்களை இழுத்து சாகசம் செய்துள்ளார்.

முதல் வேனுக்கும் இரண்டாவது வேனுக்கும் இடையே இவரது உடல் கயிறுகளால் கட்டப்பட்டது. பின்னர் முதல்வேனை ஓட்டியபோது இரண்டாவது வேனை இவரது உடல் பின்னாலேயே இழுத்து வந்தது.

இதற்காக முதல் வேனில் இவரது தலைப் பகுதியும் இரண்டாவது வேனில் இவரது கால் பகுதியும் கட்டப்பட்டன.

கராத்தே வீரர்களால் பலவிதமான சாதனைகள் செய்யப்பட்டிருந்தாலும் இது போன்ற சாதனை தமிழகத்தில்நடப்பது இதுவே முதல்முறையாகும். இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் ஆச்சரியத்துடன்பார்வையிட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+