ஹைதராபாத்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 19 பேர் பலி
குர்னூல்:
ஹைதராபாத்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 7685) நேற்று நள்ளிரவு 12.40 மணிக்கு பெரும் விபத்தில் சிக்கியது. இந்தரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதில் இதில் 19 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் நசுங்கிக்கிடக்கும் பெட்டிகளுக்குள் ரத்தக் காயங்களுடன் கிடக்கின்றனர்.
குர்னூல் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த ரயிலின் 9 பெட்டிகள்திடீரென தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கின. இதில் அந்த ரயில் தூக்கி எறியப்பட்டது. 9 பெட்டிகளும் படுவேகத்தில்ஒன்றன்மீது ஒன்று மோதிக் கொண்டு உருண்டன.
நேற்றிரவு 7 மணிக்கு வழக்கம்போல் இந்த ரயில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் புறப்பட்டது. குர்னூல் மாவட்டம்ராமலிங்கப்பள்ளி என்ற கிராமம் அருகே சென்றபோது இந்த ரயிலின் 23 பெட்டிகளில், 9 பெட்டிகள் திடீரெனதண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கின.
ரயில் படு வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் அவை தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படு வேகத்தில் உருண்டன.பெட்டிகள் நசுங்கி உருக் குலைந்தன.
இதில் 20 பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் பலர் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடக்கின்றனர். இறந்தவர்களில்பெரும்பாலானவர்கள் அன்-ரிசர்வ்ட் பெட்டியில் இருந்தவர்கள் தான். இதனால் இறந்தவர்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதில்சிரமம் உள்ளது.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் மீட்பு ரயில்களும் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். குர்னூல், அனந்தபூர் மாவட்ட போலீஸ்படைகளும் அங்கு விரைந்தன. கடும் இருட்டில் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கிடந்தவர்களை பெட்டிகளை வெட்டி மீட்டனர்.இதுவரை பலர் மீட்கப்பட்டுவிட்டனர்.
19 உடல்களும் மீட்கப்பட்டன. ஆனால், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. இன்னும் பலரது உடல்கள்பெட்டிகளுக்குள் சிக்கிக் கிடக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
தண்டவாளம் உடைந்திருந்தது:
இதற்கிடையே அந்த ரயில் வந்த பாதையின் தண்டவாளம் உடைந்திருப்பது தெரியவந்துள்ளதாக ரயில்வே அமைச்சர்நிதிஷ்குமார் கூறினார். ஆனால், இது எப்படி உடைந்தது என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாகக் கூறினார்.
இந்த ரயிலில் சுமார் 1,600 பயணிகள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications