நீதிமன்றத்தை வாழ்த்தி பார்சலில் வந்த துப்பாக்கி குண்டு
சென்னை:
"நீதிமன்றம் வாழ்க", "போலி டாக்டர்களைப் பிடியுங்கள்" என்று முன்னுக்குப் பின் முரணான வாசகங்கள் கொண்டகடிதத்துடன் ஒரு துப்பாக்கிக் குண்டும் சென்னை நீதிபதிக்கு பார்சலில் வந்தது. இந்த பார்சல் கடிதத்தை அனுப்பியதுயார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாய நீதிமன்றத்தின் துணைத் தலைவரானநீதிபதி எஸ்.எஸ். சுப்பிரமணியத்துக்கு சமீபத்தில் ஒரு பார்சல் கடிதம் வந்தது.
அதைப் பிரித்துப் பார்த்தபோது ஒரு வெடித்த துப்பாக்கிக் குண்டு, இரும்புத் துண்டு, எரிந்துபோன தீக்குச்சிகள்அடங்கிய ஒரு தீப்பெட்டி ஆகியவை இருந்தன.
இதைப் பார்த்த நீதிபதி சுப்பிரமணியம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார். அந்தப் பார்சலில் ஒரு கடிதமும்இருந்தது. மூன்று பக்கங்களுக்கு அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக் கடிதத்தில் நீதிபதியை மிரட்டும் வாசகங்கள் எதுவும் இல்லை. "நீதிமன்றம் வாழ்க", "போலிடாக்டர்களைப் பிடியுங்கள்", "என்னைப் பற்றி வடசென்னை மக்கள் எல்லோருக்கும் தெரியும்" என்பது போன்றஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வாசகங்கள்தான் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தன.
நீதிபதி சுப்பிரமணியம் உடனடியாக அந்தக் கடிதத்தைப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மிகவும் வேடிக்கையான இந்தக் கடிதத்தையும், துப்பாக்கிக் குண்டு உள்ளிட்ட பொருட்களையும் யார்அனுப்பியிருப்பார்கள் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாராவது மன நோயாளிதான் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருந்தாலும் நீதிபதிக்கு இந்தக் கடிதம் வந்திருப்பதால் சென்னை உயர் நீதிமன்றப் போலீசார் மிகவும் தீவிரமாகஇதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications