நதிகளை தேசியச் சொத்தாக்க வேண்டும்: ராமதாஸ்
திண்டிவனம்:
நாட்டிலுள்ள நதிகள் அனைத்தையும் தேசியச் சொத்தாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸின் பண்ணை வீடு உள்ள தைலாபுரத்தில் நடந்தது.
புத்தாண்டு தொடங்கிய நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைந்த அந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பாமக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, என்.டி.சண்முகம் ஆகியோர்உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் தேசியச் சொத்தாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் காவிரிப்பிரச்சினை போன்ற நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை எழாது. இதுதொடர்பாக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மேலும் பா.ம.க. உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்சேர்க்கை முடிந்த பின்னர் கட்சித் தேர்தல் நடக்கும்.
கட்சியின் மாநில நிர்வாகிகள் தவிர அனைத்து நிர்வாகிகளின் பொறுப்பும் 2002ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதைத் தொடர்ந்தே தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் யார் வேண்டுமனாலும் போட்டியிடலாம்என்றார் ராமதாஸ்.
-->












Click it and Unblock the Notifications