"ஆக்கிரமிப்பு" என்று கூறி மதிமுக பிரமுகரின் வீடு இடிப்பு
நாகர்கோவில்:
ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் மதிமுகவின் கொள்கை விளக்க அணிச் செயலாளரானநாஞ்சில் சம்பத்தின் வீட்டை அரசு அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
நாகர்கோவில் அருகே உள்ள மணக்காவிளையில் உள்ளது சம்பத்தின் வீடு. அந்த வீட்டில் அவருடைய வயதானபெற்றோர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த நேற்று முன் தினம் போலீசாரின் உதவியுடன் அரசுத் துறை அதிகாரிகள் சம்பத்தின் வீட்டைஇடித்துத் தரைமட்டமாக்கினர். "ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்" என்ற பெயரில்தான் அவர்கள் அந்த வீட்டைஇடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மதுரை-செல்லூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த சம்பத்திடம்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மிகவும் சோகமாகி விட்டார். அதே சோகத்துடனேயே இந்தத்தகவலையும் பொதுக்கூட்ட மேடையிலேயே தெரிவித்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மதிமுக கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில்,
சம்பத்தின் பெற்றோரும் மற்ற குடும்பத்தினரும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வதற்குக் கூட காலஅவகாசம் தராமல் வீட்டை இடித்துள்ள அதிகாரிகளின் இந்தச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
மதிமுக பொதுச் செயலாளரான வைகோவின் சாதனைகளையும், கட்சியின் கொள்கைகளையும் நாடு முழுவதும்சென்று முழங்கி வருபவர் நாஞ்சில் சம்பத்.
அரசியல் ரீதியாக அவர் செய்து விமர்சனங்களால் எரிச்சலடைந்த முதல்வர் ஜெயலலிதாதான் வீட்டை இடிக்குமாறுதூண்டி விட்டுள்ளார். ஏற்கனவே சம்பத் மீது மூன்று அவதூறு வழக்குகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இப்போது அவர் வீட்டையும் இடித்திருப்பது "பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற கவிதைவரிகளைத்தான் நினைவூட்டுகிறது.
பேச்சுரிமையைப் பறிக்கின்ற இத்தகைய அரசியல் பழிவாங்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கை மூலம் சம்பத்தை மட்டுமில்லாமல் கட்சியையே அச்சுறுத்த முடியாது.
தமிழக அரசின் அராஜக நடவடிக்கைகளை மதிமுக சட்டப்பூர்வமாகச் சந்திக்கும் என்று அவ்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications