கல்வி நிறுவனங்களில் ஊனமுற்றோருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உடல் ஊனமுற்றோருக்கு 3 சதவீதஇடங்களை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜ்குமார் என்ற உடல் ஊனமுற்ற மாணவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தவழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ராஜ்குமார் தனது வழக்கில் கூறியிருந்ததாவது:
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வில் நான் மாநில அளவில் 5-வது இடத்தில் தேர்வு பெற்றிருந்தேன்.இருப்பினும் எனக்கு சீட் கிடைக்கவில்லை.
மத்திய அரசின் உடல் ஊனமுற்றோர் நலன் மற்றும் சமவாய்ப்பு சட்டத்தின் 39-வது பிரிவின்படி அரசு கல்விநிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உடல் ஊனற்முறாருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடுவழங்க வேண்டும்.
ஆனால், அந்தச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
எனவே, உடனடியாக இந்த சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும், எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்கஉத்தரவிட வேண்டும் என்று அதில் அவர் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பத்மநாபன், மத்திய அரசின் இந்த இட ஒதுக்கீடு சட்டத்தை வரும் கல்வியாண்டு முதல்கட்டாயமாக தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும்.
இதுதொடர்பான அறிவிப்பை மார்ச் மாதத்திற்குள் வெளியிட வேண்டும்.
மாணவர் ராஜ்குமாருக்கு 2 வாரத்திற்குள் எம்.பி.பி.எஸ். சீட் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications