தண்ணீர் டேங்கர் லாரி மோதி முதிய தம்பதி பலி
சென்னை:
சென்னை மாநகரின் மோசமான வாகனமாக கருதப்படும் தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் வயதானகணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
அடையாறு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமன் (66), அவரது மனைவி சரஸ்வதியம்மாள் (61). இருவரும்மோட்டார் சைக்கிளில் ஷாப்பிங் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது காந்தி நகர் முதலாவது மெயின்ரோட்டில் வந்தபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி ராமன் பைக்கின்மீது பலமாக மோதி ஏறியது.
இதில் இருவரும் உடல் நசுங்கி அங்கேயே இறந்தனர். விபத்து நடந்தவுடன், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிஓடினார். வயதான இருவர் பரிதாபமாக இறந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூட்டமாக திரண்டு விட்டனர்.
போலீஸார் விரைந்து வந்து லாரியின் உரிமையாளரை வரவழைத்தனர். டிரைவர் எங்கிருந்தாலும் உடனடியாகபோலீஸில் சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் உங்களைக் கைது செய்வோம் என்று அவரை போலீஸார்எச்சரித்துள்ளனர்.
தலைமறைவான டிரைவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் போலீஸார் தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி லாரி மோதி 40 ஆடுகள் பலி:
இதற்கிடையே புதுக்கோட்டை அருகில் மினி லாரி மோதியதில் 40 ஆடுகள் நசுங்கிச் செத்தன. 30க்கும் மேற்பட்டஆடுகளின் கால்கள் உடைந்தன.
புதுக்கோட்டை அருகே சின்னையா சத்திரம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த300 ஆடுகள் சாலையில் சென்று கொண்டிருந்தன.
அப்போது தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்த மினி லாரி இந்த ஆட்டுக் கூட்டத்திற்குள் புகுந்து தாறுமாறாகஓடியது.
இதில் 40 ஆடுகள் அங்கேயே உடல் நசுங்கி துடிதுடித்து இறந்தன. 30க்கும் மேற்பட்ட ஆடுகளி கால்கள் ஒடிந்துகாயமுற்றன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications