இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி: டிக்கெட்டுகள் தீர்ந்தன
டர்பன்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள பந்தயத்துக்கானடிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.
அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்திய அணியும்பாகிஸ்தான் அணியும் மோதும் பந்தயம் மார்ச் 1ம் தேதி பிரிடோரியாவில் நடைபெறவுள்ளது.
கடந்த 1999ல் நடந்த கார்கில் போரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட இந்தியஅரசு தடை விதித்தது. இதனால் இந்திய, பாகிஸ்தான் அணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடவேஇல்லை.
ஒரு நாட்டில் மற்றொரு நாடு சுற்றுப்பயணம் செல்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் சர்வதேச அளவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்வதற்குத் தடை விதிக்கப்படவில்லை. அதன்படி உலகக் கோப்பை போட்டியின்போது மார்ச் 1ம் தேதி இருஅணிகளும் மோதவுள்ளன.
பிரிடோரியாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதற்கானடிக்கெட்டுகள் அனைத்தும் தற்போது விற்றுத் தீர்ந்து விட்டன.
பரம எதிரி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாட்டில் மோதிக் கொள்வதை இந்த இருநாடுகள் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும், டர்பனில்நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளும் கூட விற்று விட்டன.
ஆனாலும் பிப்ரவரி 8ம் தேதி கேப் டவுனில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கவிழாவுக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையில் உள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications