கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டம் வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தினருக்கான இட ஒதுக்கீட்டைப்பாதுகாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிகளும் கோரிக்கைவிடுத்துள்ளன.
இது தொடர்பாக விவாதித்த இன்று சென்னையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுகதவிர திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே மாநிலங்களில் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க முடியும்.
தமிழகத்தில் சுய நிதிக் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டை முறையைப் பின்பற்றப் போவதில்லை என்று அறிவித்திருப்பது கடும்கண்டனத்துக்குறியது. இன்றைய கூட்டத்தில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசுதலையிட்டு மாணவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டி விவாதிக்க வேண்டும். கல்லூரிகளில் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகள் கொண்ட ஒரு கமிட்டியையும் இன்று உருவாக்கியிருக்கிறோம்.
இது தொடர்பாக சென்னையில் ஒரு கூட்டுப் பொதுக் கூட்டத்தை அனைத்துக் கட்சிகளும் நடத்தும் என்றார் ராமதாஸ்.
-->












Click it and Unblock the Notifications