வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்தைத் தத்தெடுக்கும் விகடன்
நரிமணம்:
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தே விகடன் நிறுவனம் தத்து எடுத்துள்ளது.
நரிமணம் என்ற அந்த கிராமம் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தத்தளித்து வருகிறது. இங்குள்ள 400 விவசாயக்குடும்பங்களுக்கு தினமும் 1 கிலோ அரிசியை விகடன் நிறுவனம் வழங்க உள்ளது.
இத் தகவலை விகடன் பத்திரிக்கைகளின் அதிபர் எஸ்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த முறை ஏற்பட்டுள்ள வறட்சி அரசாங்கத்தால் மட்டுமே சமாளித்துவிடக் கூடிய ஒன்றல்ல. அவ்வளவு பெரும் வறட்சி இது.விவசாயத் தொழிலாளர்களின் நிலை மிகக் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நிலமற்ற ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் பசிக் கொடுமையால் செத்துப் பிழைக்கின்றன. இந்தசகோதர, சகேதரிகளுக்கு ஆர்வமும் சக்தியும் உள்ள ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.
எஸ்.எஸ். வாசன் அறக்கட்டளையுடன் விவாதித்தபோது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து உதவலாம் என்ற யோசனை பிறந்தது.இதையடுத்து மிகவும் பாதிக்கப்பட்ட நரிமணத்தைத் தேர்வு செய்தோம். இங்குள்ள விவசாயக் குடும்பங்களுக்கு தினமும் 1 கிலோஅரிசி அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.
இதே போல ஆர்முள்ள தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களும் அவரவர் சக்திக்கு ஏற்ப கிராங்களைத் தத்தெடுத்து உதவமுன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
செஞ்சோற்றுக் கடனாக இதைக் கருத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications