தாவூத் தம்பியை இந்தியாவிடம் ஒப்படைத்தது துபாய்

Subscribe to Oneindia Tamil

துபாய் & மும்பை:

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிம் தம்பி இக்பால் ஷேக் கஸ்கரையும்,அவனது கூட்டாளி இஜாஸ் பதானையும் துபாய் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

இப்போது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடன் கராச்சி நகரில் வசித்து வரும் தாவூத் இப்ராகிம்மீது மும்பை குண்டுவெடிப்பு, ஆள் கடத்தல்கள், பணம் பறித்தல், கொலைகள் என பல்வேறு வழக்குகள் உள்ளன.

துபாய்க்கு தப்பியோடி அங்கு ரியல் எஸ்டேட், போதை மருந்து கடத்தல், ஹோட்டல் தொழில்களில் ஈடுபட்டிருந்ததாவூத் பின்னர் பாகிஸ்தானில் குடியேறிவிட்டான். ஆனால், அவனது துபாய் தொழில்களை நிர்வகிக்க இவனதுதம்பிகளும் கூட்டாளிகளும் அங்கேயே தங்கியிருந்தனர்.

இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு துபாய் அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இதையடுத்துஇவர்களும பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், அவ்வப்போது துபாய்க்குச் சென்று வந்தனர்.

இவர்கள் துபாய் வரும்போதெல்லாம் அதைக் கண்டறிந்த இந்திய உளவுப் பிரிவான ரா, அது குறித்து மத்தியஅரசுக்குத் தகவல் தரும். உடனே இவர்களைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரும்.ஆனால், கைது செய்துவிட்டு பின்னர் அவர்களை பாகிஸ்தானுக்கே நாடு கடத்துவதாகக் கூறி இவர்களைக்காப்பாற்றி வந்தது துபாய்.

இதனால் இந்தியா- துபாய் இடையே தூதரக மட்டத்தில் மோதல்கள் வெடித்தன. இந் நிலையில் தாவூதின்வலதுகரமான இஜாஸ் பதானும் அவனது தம்பி இக்பால் ஷேக் கஸ்கரும் துபாயில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாதுபாய் அரசுக்கு அவசரக் கடிதம் அனுப்பினார். இப்போது ரஷ்யாவில் உள்ள சின்ஹா அங்கிருந்து இக் கடிதத்தைஅனுப்பினார். அந்தத் கடிதத்துடன் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் துபாய் விரைந்தனர்.

கடிதத்தையும் கொடுத்து அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தையும் இந்திய அதிகாரிகள் தெரிவித்ததால்அவர்களைக் கைது செய்ய துபாய் ஒப்புக் கொண்டது. மேலும் அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் முன்வந்தது.

இதையடுத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டு நேற்றிரவு மும்பை விமானத்தில் வலுக்கட்டாயமாகஏற்றப்பட்டனர். அந்த விமானத்தில் மத்திய உளவுப் பிரிவினரும் வந்தனர்.

விமானம் மும்பை வந்திறங்கியவுடன் போலீசார் சுற்றி வளைத்து இந்த இருவரையும் கைது செய்தனர். இதனால்நேற்றிரவு மும்பை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும்குவிக்கப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தான் அரசின் கடும் முயற்சிகளையும் மீறி இந்த இருவரையும் துபாயில் இருந்து வெற்றிகரமாக இந்தியாஇழுத்து வந்துள்ளது.

இந்த இருவரையும் யார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில் மத்திய உளவுப் பிரிவான ஐ.பி- சி.பி.ஐ.கூட்டுப் படைக்கும் மும்பை போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பதானை சி.பி.ஐயும் கஸ்கரை மும்பை போலீசாரும் தங்களது கட்டுப்பாட்டில்வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போர்சுகலும் உதவி:

இற்கிடையே போர்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்ட தாதா அபு சலீமை இந்தியாவிடம் ஒப்படைக்க அந் நாடுமுன் வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தி நடிகையுடன் அந் நாட்டில் பிடிபட்டான் அபு சலீம்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+