சாத்தான்குளம்: 48 கிராமங்கள் பதற்றம் நிறைந்தவை-டிஜிபி தகவல்
சென்னை:
சாத்தான்குளத்தில் 48 கிராமங்கள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனால்அங்கெல்லாம் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் மாநில காவல்துறை டி.ஜி.பி. ராஜகோபாலன்கூறியுள்ளார்.
இடைத் தேர்தலில் கள்ள ஓட்டு போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்எச்சரித்துள்ளார். இன்று சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சாத்தான்குளத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும்காவல்துறை எடுத்துள்ளது.
சிலபேர் மத்திய போலீஸார், புற ராணுவப் பிரிவுகள் வர வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால்,தமிழக போலீஸாரின் நடவடிக்கை குறித்து திருப்தி அடைந்துள்ள தேர்தல் ஆணையம் மத்திய போலீஸாரைஅனுப்பமுடியாது என்று மறுத்துவிட்டது.
வாக்குப் பதிவு நடக்கும் நாளன்று அங்கு 1,800 போலீசார் நிறுத்தப்படுவர். இவர்கள் தவிர அதிரடிப் படையினரும்,நடமாடும் கண்காணிப்புப் படை போலீசாரும் பெரும் அளவில் குவிக்கப்படுவர். இதனால் தேர்தல் நாளன்றுவன்முறை ஏதும் நடக்கும் என்ற மக்கள் அச்சப்பட தேவையே இல்லை.
கள்ள ஓட்டு போடுவது, விதிகளை மீறி செயல்படுவது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் விட மாட்டோம்.அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் வாக்குச் சாவடிகளில் நிற்கும்போலீசாரிடம் புகார் தந்தால் அவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் சாத்தான்குளத்தில் பதற்றம் நிறைந்தவையாக 48 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல்போலீசாரை நிறுத்தவும் முடிவு செய்துள்ளோம்.
மதரீதியில் மோதல் நடக்கலாம் என்று 16 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதே போல, மதமோதல்கள் நிச்சயம் நடக்கலாம் என்று 2 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதே மாதிரி ஜாதிரீதியிலான பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக 8 இடங்களும், சாதி மோதலுக்கு அதிகவாய்ப்புள்ள ஹைபர் சென்சிடிவ் பகுதிகளாக 9 வாக்குச் சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அரசியல்ரீதியில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.உளவுப் பிரிவுகள் கொடுத்த தகவல்களை வைத்து இந்த விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இங்கெல்லாம் கூடுதல்போலீசாரும் அதிரடிப்படை போலீசாரும் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு எந்தவிதமான அசம்பாவிதமும்இல்லாமல் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்முறையைத் தூண்டுவோர், கள்ள ஓட்டு போடுவோர் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்று எச்சரிக்கிறேன்.
வாக்குப் பதிவு நடக்கும் 26ம் தேதியும் அதற்கு முந்தைய நாளும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மார்ச்-1ம்தேதியும் அங்கு மதுக்கடைகள் மூடப்படும்.
மேலும் இதுவரை தேர்தல் தொடர்பான விதிமீறல்கள், மோதல்களில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடக்கும் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக்கிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்படும். கள்ள ஓட்டு ஆசாமிகளை தீவிரமாகக் கண்காணிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றார் ராஜகோபாலன்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications