சாத்தான்குளத்தில் இன்று திமுக பொதுக் கூட்டம்: சரத்குமார் அண்ணன் அதிமுகவுக்கு ஆதரவு
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் திமுக சார்பில் இன்று பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள்பேசுகின்றனர். அவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு மறைமுக கோரிக்கை வைக்கார்கள் என்றுதெரிகிறது.
இத் தொகுதியில் 26ம் தேதி நடக்கும் தேர்தலையொட்டி பிரச்சாரம் உச்ச கட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின்நேற்றும் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.
கிருஸ்துவர்களின் ஓட்டை காங்கிரஸ் லவட்டிக் கொண்டு போவதைத் தடுக்க அப் பகுதி பாதிரியார்களைஅமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதையடுத்து நேற்று சுமார் 28 பாதிரியார்கள் முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அக் கட்சி கூறுகிறது. ஆனால், அரசும் அமைச்சர்களும் கொடுத்தநெருக்குதலால் தான் முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்தோம், மற்றபடி ஆதரவு எதையும் வழங்குவதாகக்கூறவில்லை என பாதிரியார்கள் கூறினர்.
இந் நிலையில் இத் தொகுதியில் காங்கிரஸ் வாக்குகள் பிரியாமல் தடுக்கும் பொருட்டு போட்டியில் இருந்து விலகியதிமுக இன்று அங்கு பொதுக் கூட்டம் நடத்துகிறது. சட்டசபையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. குமாரதாஸ் கொடுத்தபுகாரை வைத்து திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டதைக் (இப்போது ஜாமீனில் வெளியில்வந்துவிட்டார்) கண்டித்து இந்தப் பொதுக் கூட்டம் நடக்கிறது.
சட்டசபை ஜனநாயகமும் அதிமுகவின் சர்வாதிகாரமும் என்ற தலைப்பில் இந்த கண்டன பொதுக் கூட்டம்நடத்தப்படுவதாக திமுக கூறினாலும் இது முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆதரவு பொதுக் கூட்டமாகத் தான் இத்தொகுதி மக்களால் பார்க்கப்படுகிறது.
சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகே நடக்கும் இந்தப் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின், பரிதி இளம்வழுதி,தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், நடிகர் நெப்போலியன்மற்றும் திமுக முன்னணி பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் சாத்தான்குளத்தில் குவியஆரம்பித்துள்ளனர். பொது கூட்டத்தை முடித்துவிட்டு இவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் களத்திலும்நேரடியாகக் குதிப்பர் என்று தெரிகிறது.
இதற்கிடையே திமுகவின் வாக்குகளை சேகரிப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. கருணாநிதியின்படங்களுடன் கூடிய காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
காங்கிரஸ் பிரச்சார வேன்கள், கார்களில் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. திமுக கரை வேட்டியினரை வீடுதேடிப் போய் இழுத்துச் செல்கின்றனர் காங்கிரசார். மதிமுகவினரையும் தங்கள் பிரச்சாரத்தில் காங்கிரஸ் சேர்த்துக்கொண்டுள்ளது. ஆனால், வைகோவின் படங்கள் எந்த போஸ்டரிலும் இல்லை.
இன்றைய திமுக பொதுக் கூட்டத்தில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றரீதியில் பிரச்சாரம் இருக்கும்.மறைமுகமாக காங்கிரசுக்கு வாக்களிக்கவும் ஸ்டாலின் கோருவார் என்று தெரிகிறது.
சரத்குமார் ஆப்சென்ட்:
நடிகர் சரத்குமார் இந்தப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது. நாடார் சமூகததைச் சேர்ந்தஇவரது பிரச்சாரத்தின் மூலம் வாக்குகளைக் கவர காங்கிரஸ் திட்டமிட்டது. அவரையும் பொதுக் கூட்டத்துக்கு வரச்செய்ய திமுக தலைமையிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேசினர்.
ஆனால், இக் கூட்டத்தில் பங்கேற்க சரத்குமார் விரும்பவில்லை என்று தெரிகிறது. திமுகவில் இருந்தாலும் அங்குஅவர் திருப்தியுடன் இல்லை என்று கூறப்படுகிறது.
அதிமுகவுக்கு சரத் அண்ணன் ஆதரவு:
இந் நிலையில் சரத்குமாரின் அண்ணன் சுதர்சன் தலைமையிலான நாடார் சங்கப் பேரவை சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெவித்துள்ளது.
சுதர்சன் நிருபர்களிடம் கூறுகையில், சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.அங்குள்ள நாடார் சமுதாய மக்கள் அதிமுக வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள் என்றார்.
இதற்கிடையே சாத்தான்குளத்தில் தேர்தலை நடத்த மத்தியப் படைகள் தேவையில்லை என தலைமைத் தேர்தல்கமிஷன் கூறிவிட்டது. இப்போது 5 மத்தியப் பார்வையாளர்கள் அங்குள்ளதாகவும் மத்தியப் படை தேவையில்லைஎனவும் எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை தேர்தல் கமின் நிராகரித்துவிட்டது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications