பாமக எம்.எல்.ஏ.முருகவேல்ராஜன் மதுரையில் கைது
மதுரை:
மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு பேரணி நடத்த முயன்ற பாட்டாளிமக்கள் கட்சி எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் உள்ளிட்ட 130 தலித் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
முருகவேல்ராஜன் நேற்று தனது காரில் திருப்புவனம் அருகே வந்தபோது சிலர் அவரது கார் மீதுதாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து இன்று காலை தனது தேவேந்திரகுல இளைஞர்கள் சங்கத் தொண்டர்கள் சிலருடன்மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு பாதயாத்திரையாகச் சென்று தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி போலீசாரை சந்திக்கக் கிளம்பினார்முருகவேல்ராஜன்.
இதனால் ஜாதி மோதல்கள் நடக்கும் நிலை உருவானதால் போலீஸார் விரைந்து வந்துபாதயாத்திரையாக செல்ல அனுமதியில்லை என்று கூறிமுருகவேல்ராஜனைத் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் தடையை மீறிச் செல்வோம் என்றுமுருகவேல்ராஜன் கூறவே அவரையும் உடன்இருந்தவர்களையும் கைது செய்தனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முருகவேல்ராஜன். ராமதாசுடன் ஏற்பட்ட மோதலையடுத்து பா.ம.கவில்இருந்து ஒதுங்கியே இருந்து வந்த இவரை சமீபத்தில் பேசி சரி செய்து விட்டார் ராமதாஸ்.
தலித்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாகக் கூறி சட்டசபையிலேயே சட்டையைக் கழற்றிபரபரப்பை ஏற்படுத்தியவர் முருகவேல்ராஜன்.
மதுரையில் இவரது காரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியத்தின்ஆதரவாளர்கள் தாக்கினர். அந்த வழியே வந்த ஜி.கே. வாசனை வரவேற்கக் காத்திருந்தனர்பாலசுப்பிரமணியத்தின் ஆதரவாளர்கள். அப்போது அந்த வழியே சென்ற முருகவேல்ராஜனின் கார்டிரைவர் அதிக சத்தம் தரும் ஏர்-ஹாரனை உபயோகித்தார்.
இதை பாலசுப்பிரமணியத்தின் ஆட்கள் ஆட்சேபிக்க இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது.கடைசியில் முருகவேல்ராஜனை பாலசுப்பிரமணியத்தின் ஆட்கள் தாக்கினர்.
இதையடுத்து பாலசுப்பிரமணியத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்யக் கோரியேமுருகவேல்ராஜன் ஊர்வலம் செல்ல முயன்றார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications