சொந்தக்காரர் மாதிரி நடித்து நகை திருடிய ஆசாமி
விருதுநகர்:
சொந்தக்காரர்போல நடித்து 30 பவுன் நகையைத் திருடி வங்கியில் அடமானம் வைத்த நபரை 48 மணி நேரத்தில்போலீஸார் பிடித்தனர்.
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மங்கம்மாள். சுகாதாரத்துறையில் பணியாற்றிவருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். மங்கம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.
கடந்த 17ம் தேதி இவரது வீட்டில் இருந்த 30 பவுன் நகை காணாமல் போது. இதுதொடர்பாக போலீஸில் புகார்கொடுத்தார் மங்கம்மாள். போலீஸார் விசாரணை நடத்தியபோது விருதுநகர் அருகே உள்ள வட்டக்காரப்பட்டிஎன்ற பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவர் பிடிபட்டார்.
இவரிடம் விசாரணை நடத்தியபோது மங்கம்மாள் வீட்டில் இல்லாத நேரத்தில் அப்பகுதிக்கு வந்து அவரதுசொந்தக்காரர் போல நடித்து அருகில் உள்ள வீடுகளில் பேச்சுக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் சின்னராஜ்.
பின்னர் ஒரு நாள் கள்ளச் சாவியுடன் வந்தவர், தான் மங்கம்மாளை அலுவலகத்தில் போய் சந்தித்தாகும், அவர்தன்னிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்து போய் இருக்கச் சொன்னதாகவும் அருகில் இருந்த வீட்டினரிடம்கூறிவிட்டு உள்ளே போனார்.
வீட்டைத் திறந்து நகையை எடுத்துக் கொண்டு டீ குடித்துவிட்டு வருவதாக வெளியில் நின்றிருந்த பக்கத்துவீட்டினரிடம் கூறிவிட்டுத் தப்பியுள்ளார்.
சின்னராஜ் கொடுத்த தகவலின் பேரில் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகை மீட்கப்பட்டது.
-->


Click it and Unblock the Notifications
