ஏவுகணைகளை அழிக்க ஈராக்குக்கு உத்தரவு
ஐ.நா. சபை:
200 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்ட அல்- சமத் ஏவுகணைகளை மார்ச் 1ம் தேதிக்குள்அழிக்குமாறு ஈராக்குக்கு ஐ.நா. சபையின் ஆயுதக் கண்காணிப்புக் குழு கெடு விதித்துள்ளது.
ஈராக்கில் தொடர்ந்து ஆய்வு நடத்திய இந்தக் கண்காணிப்புக் குழு அங்கு அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்கள்இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறியிருந்தது. இதனால் ஈராக்கைத் தாக்கும் அமெரிக்க-பிரிட்டனின் திட்டத்துக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
அதே நேரத்தில் ஐ.நாவின் தடையையும் மீறி ஈராக் வைத்துள்ள 200 கி.மீ. தொலைவு செல்லும் ஏவுகணைகளைஉடனே அழிக்குமாறு ஆயுத கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹேன்ஸ் பிலிக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததையடுத்து அந் நாடு மீது ஐ.நா. பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதிக சக்திகொண்ட ஏவுகணைகளை வைத்திருக்கவும், அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கவும் ஈராக்குக்குஐ.நா. தடை விதித்துள்ளது.
இதை ஈராக் மீறிவிட்டதாகக் கூறித் தான் அந் நாட்டைத் தாக்க அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், ஐ.நாவின்எந்த விதியையும் மீறவில்லை என ஈராக் கூறி வருகிறது. ஆயுத கண்காணிப்புக் குழுவும் கூட அங்கு மனிதகுலத்துக்கு எதிரான பேராபத்து விளைவிக்கும் ஆயுதங்கள் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளது.
ஆனால், 200 கி.மீ. தூரம் செல்லும் அல்-சமத் ஏவுகணையை ஈராக் வைத்திருப்பது விதிமீறல் தான் என ஆயுதக்கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹேன்ஸ் பிலிக்ஸ் கூறியுள்ளார். உடனே இந்த ஏவுகணைகளை அழிக்குமாறுஈராக் நாட்டுக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார்.
ஐ.நாவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மார்ச் 1ம் தேதிக்குள் இந்தப் பணியை ஈராக் ஆரம்பிக்க வேண்டும்எனவும் பிலிக்ஸ் கூறியுள்ளார்.
150 கி.மீ. தூரம் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை மட்டுமே ஈராக் வைத்திருக்கலாம் என ஐ.நா.கட்டுப்பாடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈராக்கைத் தாக்க கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கொண்ட படையை குவைத், சவுதி அரேபியா, துருக்கிமற்றும் கடல் பகுதிகளில் அமெரிக்கா குவித்துவிட்டது. எந்த நேரத்திலும் ஈராக்கைத் தாக்கத் தயார் என்றும்கூறியுள்ளது.
ஈராக்கை அழிக்கப் போவதில்லை எனவும் சதாம் உசேனைத் தூக்கி எறிந்துவிட்டு அங்கு வேறொரு ஆட்சியைநியமிக்கவே இந்தப் போர் தொடுக்கப்படுகிறது எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்கூறியுள்ளார்.
இதற்கிடையே நாளை மறுநாள் மலேசியாவில் கூடும் அணி சேரா நாடுகள் கூட்டத்திலும் ஈராக் மீதானதாக்குதலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறலாம் என்று தெரிகிறது.
ஈராக்கை விட மிக மோசமான தீவிரவாத நாடு பாகிஸ்தான் தான் என அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லலித்மான்சிங் கூறியுள்ளார். ஈராக்கைத் தாக்குவதை விட்டுவிட்டு முதலில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளையும்,தீவிரவாதிகளை ஆதரிக்கும் முஷாரப் அரசை விரட்டவும் அமெரிக்கா முயல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி ஆராய்ச்சிக் கழகத்தின்தலைவர் அல்பராடைய் பார்வையிட ஆரம்பித்துள்ளார். இந்த நாடும் ஐ.நா. விதிகளை மீறி புளுட்டோனியத்தைவைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இச் சோதனைகள் தொடங்கி இருக்கின்றன. ஈராக்-ஈரான்-வட கொரியா ஆகிய மூன்றும் தீவிரவாதநாடுகள் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சமீபத்தில் குற்றம் சாட்டியது நினைவு கூறத்தக்கது.
இந் நிலையில் வட கொரியாவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்காஈடுபட்டுள்ளது. அந் நாட்டுக்கு முன்பு உறுதியளித்தபடி பெட்ரோலியம் மற்றும் உணவு தானியங்களை வழங்கஅமெரிக்கா முன் வந்துள்ளது.
அணு ஆயுத சோதனைகளை நிறுத்தினால் இந்த உதவிகள் வழங்குவோம் என்று அமெரிக்கா கொடுத்தஉறுதிமொழியை நம்பி தனது அணு ஆயுத ஆராய்ச்சிகளை வட கொரியா நிறுத்தியது. ஆனால், திடீரெனஅமெரிக்கா தனது உறுதிமொழியில் இருந்து புரண்டது.
இதையடுத்து மீண்டும் அணு ஆயுத ஆராய்ச்சிகளை ஆரம்பித்ததுடன், தென் கொரியாவில் உள்ள அமெரிக்கப்படைகளையும் மிரட்ட ஆரம்பித்துள்ளது வட கொரியா.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications