உட்கட்சிப் பூசல்: திமுகவினருக்கு கருணாநிதி கடும் எச்சரிக்கை
சென்னை:
திமுக உள்கட்சித் தேர்தலில் குளறுபடி செய்பவர்கள் திருந்தாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என தனது கட்சியினருக்கே கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவில் உட் கட்சிப் பூசல் உச்ச கட்டத்தில் உள்ளது. அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தொண்டர்களபிளவுபட்டு நிற்கின்றனர். கருணாநிதி சென்னையில் இருக்கும்போது ஸ்டாலினை ஆதரிப்பதும், தென்மாவட்டங்களுக்குச் செல்லும்போது அழகிரியை ஆதரித்துப் பேசுவதுமாக இருப்பதால் தொண்டர்கள் குழப்பத்தில்உள்ளனர்.
அழகிரிக்கு செக் வைக்கும் விதத்தில் தேனியில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த தனது கோஷ்டிக்கு ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார். இம் மாதம் 9ம் தேதி நடக்கும் இக் கூட்டத்தில் ரத்தக் களரி ஏற்படலாம் என உளவுப் போலீசார்எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில் திமுகவின் கிளைக் கழகங்களுக்கான தேர்தலில் கோஷ்டிப் பூசல் காரணமாக சிக்கல் எழுந்துள்ளது.கோஷ்டிப் பூசல் காரணமாக தென் மாவட்ட கிளைக் கழகங்களுக்கு தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இதையடுத்து திமுக தொண்டர்களுக்கு ஒரு காட்டமான கடிதத்தை முரசொலி பத்திரிக்கையில் கருணாநிதிஎழுதியுள்ளார். அதன் விவரம்:
சில கிளை அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. அவற்றை விரைவில் முடித்து ஜூன்மாதத்துக்குள் புதிய பொதுக் குழு உறுப்பினர்கள் கூடி தலைமைக் கழகத் தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், கட்சியியின் தேர்தல் நடைபெறும்போது பொறுப்பில் உள்ள நம்மவர்களே நடந்து கொள்ளும்முறையைக் கண்டும், கேட்டும் நான் மனம் நொந்து போகிறேன்.
பாசம், நேசம் என்பதெல்லாம் என்னை நேரில் பார்க்கும்போது தான், பிறகு உட்கட்சி ஜனநாயகத்துக்கே சிலஇடங்களில் நாசம் செய்கிறீர்கள். நம்மிடையிலும் நாணயமற்றவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குகுறைந்த தொகையினராக இருப்பினும் அவர்களை நான் பாற்குடத்தில் ஒரு விஷம் என்றே கருதுகிறேன். இதனைநான் மனம் உடைந்து சொல்கிறேன்.
ஒரு துளி விஷம் தானே என்று விட்டுவிட முடியுமா? ஒரு குடம் பால் அல்லவா பாஷாணமாகிவிடும்.
இந்த உட்கட்சித் தேர்தலில் தங்களை அறியாமலே தவறு செய்தோ, அறிந்தே தவறு செய்தோர், இல்லாதஉறுப்பினர்களை இருப்பதாக சேர்த்தோர், இருக்கும் உறுப்பினர்களை இல்லாமல் ஆக்கியோர் போன்றகுதர்க்கவாதிகள் தாங்கள் புரியும் குற்றத்துக்கு தலைமைக் கழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டஆணையர்களையே கைக்குள்ளும் பைக்குள்ளும் போட்டுக் கொண்டு புரிந்துள்ள அநாகரீக செயல்கள் என்கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிது. சிலரது கடந்த கால கட்சிப் பணி கருது கெளரவமானநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கள்ளிச் செடிகளை களைகளைப் போல முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டால் முள்மரத்தை தழைத்தோங்கவிட்டது போலாகிவிடும்.
சிறப்பாக வரக் கூடியவர்கள், சீராக வளரக் கூடியவர்கள் என நான் எண்ணிய, எதிர்பார்த்தவர்களிடமே எனக்குஇந்தத் தேர்தலில் ஏற்பட்டது ஏமாற்றமே. என் செய்வது. என்றாவது ஒரு நாள் திருந்திடுவர் என்று நம்புகிறேன்.
என் நம்பிக்கை வீண் போனால் நாணயமற்றவர்கள் பட்டியலை நானே வெளியிட வேண்டியிருக்கும்.
என்னவோ எழுதுகிறான், ஏதோ எழுதுகிறான் என்று அலட்சியப்படுத்தினால் என் கருத்தை உதாசீனப்படுத்தினால்அதன் விளைவி விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கிறேன். இனி உங்கள் விருப்பம்.
இவ்வாறு கடுமையான கடிதத்தை திமுகவினருக்கு கருணாநிதி எழுதியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications