ஜெயலலிதாவை சந்தித்தார் நீலமேகவர்ணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Sattankulam MLA Neelamegavarnam meets Jayalalithaசாத்தான்குளம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நீலமேகவர்ணம் இன்று முதல்வர்ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்து காலில் விழுந்து வணங்கினார்.

அவரை அழைத்து வந்த அமைச்சரும் சாத்தான்குளம் தொகுதியில் தேர்தல் பொறுப்பாளருமானஅனிதா ராதாகிருஷ்ணனும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கினார்.

அப்போது அமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட சாத்தான்குளம் தேர்தல் குழுவில் இருந்த 10அமைச்சர்களும் உடனிருந்தனர்.

கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்ற சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்மகேந்திரனை விட அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் 17,492 வாக்குகள் அதிகம் பெற்றுஎம்.எல்.ஏவானார்.

தமிழக சட்டசபையில் 137வது அதிமுக எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீலமேகவர்ணம்,நேற்று காலையிலேயே சென்னை வந்து சேர்ந்து விட்டார். இன்று காலை 11.30 மணிக்கு அவரைகோட்டைக்கு அமைச்சர்கள் அழைத்துச் சென்றனர்.

ஜெயலலிதாவிடம் மலர்ண்ெடு கொடுத்த நீலமேகவர்ணம் அவரது காலில் விழுந்து வணங்கினார்.பின்னர் தேர்தல் அதிகாரி கொடுத்த தனது வெற்றிக்கான சான்றிதழை ஜெயலலிதாவிடம்வழங்கினார்.

இதையடுத்து அங்கிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓடி வந்து ஜெயலலிதாவின் காலில்விழுந்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+