சென்னை-மலேசியா, ஷார்ஜா-திருச்சி விமானங்களில் கோளாறு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

சென்னையிலிருந்து மலேசியாவுக்குக் கிளம்ப வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்கோளாறு ஏற்பட்டது. அதேபோல் ஷார்ஜாவிலிருந்து சென்னை செல்ல வேண்டிய இந்தியன்ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் கோளாறு ஏற்பட்டு நின்று விட்டது.

சென்னையிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று அதிகாலை 1.20 மணிக்குமலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பியது.

ஆனால் அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானம் தரையிலிருந்து மேலே எழும்பவில்லை.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.விமானத்திலிருந்த 270 பயணிகளும் உடனடியாக அதிலிருந்து இறக்கப்பட்டு, சென்னையில் உள்ளபல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் இன்று இரவு சுமார் 7 மணிக்குத்தான் அந்த விமானம்கோலாலம்பூருக்குக் கிளம்பிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சியில் நின்ற விமானம்:

இதற்கிடையே ஷார்ஜாவிலிருந்து சென்னை செல்ல வேண்டிய விமானம் தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக திருச்சியிலிருந்து தாமதமாகக் கிளம்பியது.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐ.சி.968 விமானம் ஷார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் மற்றும்திருச்சி வழியாக சென்னைக்கு இயக்கப்படுகிறது.

அதன்படி இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு இந்த விமானம் வந்துசேர்ந்தது. அதில் மொத்தம் 10 பயணிகளே இருந்தனர்.

பின்னர் காலை 5.20 மணிக்குக் கிளம்ப வேண்டிய இந்த விமானத்தில் பிரபல நகைச்சுவை நடிகர்மயில்சாமி உள்பட எட்டு பேர் சென்னை செல்வதற்காக ஏறினர்.

ஆனால் கிளம்புவதற்கு முன் அந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இருந்தாலும் அந்தக் கோளாறை அங்கிருந்த ஊழியர்களால் சரி செய்ய முடியவில்லை.சென்னையிலிருந்து வேறு ஊழியர்களும், கருவிகளும் இதற்காக வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து சென்னையிலிருந்து கொச்சி வழியாக மஸ்கட்டுக்குப் புறப்பட்ட மற்றொருவிமானத்தில் உரிய கருவிகளுடன் ஊழியர்கள் காலை 8 மணிக்கு திருச்சி வந்து சேர்ந்தனர். அந்தவிமானம் பின்னர் கொச்சிக்குக் கிளம்பிச் சென்றது.

அதன் பின்னர் ஷார்ஜா-சென்னை விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டு காலை 8.45 மணிக்குஅது சென்னைக்குக் கிளம்பிச் சென்றது.

மதுரையிலும்...

இதற்கிடையே நேற்று இரவு மதுரையிலிருந்து சென்னை கிளம்ப வேண்டிய ஜெட் ஏர்வேஸ்விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து சுமார் நான்கு மணி நேரம் தாமதத்திற்குப் பின்னர் வேறொரு விமானம்தான்பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்குக் கிளம்பியது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+