செய்த தவறுக்கு வெட்கப்படாத ஜெயலலிதா: தேர்தல் கமிஷ்னர் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தவறைச் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்தால் கூட அதை சில அரசியல்வாதிகள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. செய்த தவறுக்காகவெட்கப்படுவதும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஜே.எம்.லிங்டோ கருத்துத் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுகவின் முறைகேடுகளையும், அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதையும் தேர்தல்கமிஷன் கடுமையாகக் கண்டித்தது. இதையடுத்து தலைமைச் செயலாளர் மூலம் ஒரு விளக்கக் கடிதத்தை ஜெயலலிதா தேர்தல் கமிஷனுக்குஅனுப்பினார் ஆனால், அந்த விளக்கததை ஏற்க கமிஷன் மறுத்தது.

இந் நிலையில் டெல்லியில் இன்று நிருபர்களைச் சந்தித்த லிங்டோ கூறியதாவது:

வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வது, கள்ள ஓட்டுகளைத் தயார் செய்வது என நாடு முழுவதும் சட்டவிரோத செயல்களின் ஈடுபடும்அரசியல்வாதிகள், கட்சிககளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்தால் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களைச் சேர்ப்பதும்,தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கருதப்படுபவர்களை நீக்குவதும் ஆட்சியாளர்களுக்கு வழக்கமாகிவிட்டது.

ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் திருத்துகிறது. ஆனாலும் இந்த கள்ள ஓட்டுகள் சேர்க்கப்படுவதை முழுமையாகத்தடுக்க முடியவில்லை. சட்டரீதியில் இதுபோன்ற தவறுகளுக்கு தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆவதால் யாரும் இந்தச் செயலைச்செய்ய பயப்படுவதும் இல்லை.

இதைத் தடுக்க சில புதிய நடைமுறைகளை விரைவில் அமல்படுத்தவுள்ளோம். இந்த முறைகேடுகளைத் தடுக்க வாக்காளர் பட்டியலைஇன்டர்நெட்டில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். இந்தப் பணி முதல் கட்டமாக டெல்லியில் தொடங்கும் என்றார்.

சாத்தான்குளத்தில் அதிமுக செய்த விதிமீறல்கள், அதை தேர்தல் கமிஷன் கண்டித்தது ஆகியவை குறித்து கேட்டபோது லிங்கோ அளித்தபதில்:

தேர்தல் விதிகளை மீறுவதைக் கண்டித்தால் கூட சில அரசியல்வாதிகள் (ஜெயலலிதா) வெட்கப்படுவதில்லை. இவர்களை என்ன செய்யமுடியும்?. நாம் ஒரு நாகரீகமான ஜனநாயக அமைப்பில் இருந்தால் இது போன்ற அரசியல்வாதிகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம்இருக்காது. ஆனால், இங்கு நிலையே தலைகீழாக உள்ளது.

நம்மைப் போன்ற ஒரு ஒளிவுமறைவில்லாத சமூகத்தில் சுட்டிக் காட்டப்பட்ட தவறுக்காகக் கூட ஒருவர் வெட்கப்படாவிட்டால் என்னசெய்வது?. எதிர்காலத்திலாவது இது போன்ற அரசியலவாதிகள் கொஞ்சம் மனம் வருந்தினால் சரி என்றார் லிங்டோ வெறுப்புடன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+