மலேசியாவில் தமிழக இளைஞர்கள் சித்திரவதை
சென்னை:
தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற 63 இளைஞர்கள் அங்கு கடுமையானசித்திரவதைக்கு உள்ளாவதாக சென்னை போலீசாரிடம் அவர்களுடைய பெற்றோர்கள் புகார்கொடுத்துள்ளனர்.
மலேசியா துறைமுகத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 63இளைஞர்களை சென்னையைச் சேர்ந்த ஐ.ஜி. என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் அனுப்பி வைத்தது.
ஆனால் மலேசியாவில் அந்த இளைஞர்களுக்கு உரிய வேலைகள் வழங்கப்படவில்லை. மேலும்அடிமாட்டு சம்பளத்துக்கு அவர்களிடமிருந்து கூலி வேலைகள் வாங்கப்பட்டன.
அந்த சம்பளமும் கூட குறித்த நேரத்திற்குத் தரப்படுவதில்லை. சம்பளத்தைக் கேட்டால் கடலுக்குள்தூக்கி எறிந்து கொன்று விடுவோம் என அவர்களுக்கு வேலை கொடுத்த மலேசிய நிறுவனத்தைச்சேர்ந்தவர்கள் கூறி மிரட்டி வருகின்றனர்.
சம்பளம் கேட்கும் இளைஞர்களைத் தனி அறையில் பூட்டி வைத்து அடித்துச் சித்திரவதைசெய்வதாகவும் தெரிகிறது. இந்த இளைஞர்களில் சிலர் தாங்கள் சித்திரவதை செய்யப்படுவதைத்தங்கள் பெற்றோருக்கு போன் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து மலேசியாவில் கொடுமைக்கு உள்ளாகி வரும் இளைஞர்களைக் காப்பாற்றி மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களுடைய பெற்றோர்கள் சென்னை மாநகரபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தியர்கள் மீது தாக்குதல்:
இதற்கிடையே மலேசியாவில் தங்கி பணிபுரிந்து கொண்டிருக்கும் சாப்ட்வேர் என்ஜினியர்கள்உள்பட 270 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் பயங்கரமாகத் தாக்கியுள்ளனர்.
விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்பவர்களைத் தேடுகிறோம் என்ற போர்வையில் மலேசியப்போலீசார் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் வீடு வீடாக நுழைந்துஇந்தியர்களைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.
பல இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி அதிலிருந்த விசாபக்கங்களைக் கிழித்தும், தகவல்களை அழித்தும் சேதப்படுத்தியுள்ளனர் மலேசியப் போலீசார்.
இதைத் தட்டிக் கேட்ட சாப்ட்வேர் என்ஜினியர்களைக் கன்னத்தில் அறைந்தும், உதைத்தும் மலேசியபோலீசார் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் பலரை மண்டியிட்டு நிற்கச் செய்துள்ளனர். இந்தக்கொடுமைக்குள்ளாவர்களில் பெண்களும் அடங்குவர்.
மேலும் முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லை என்று குற்றம் சாட்டி சுமார் 164இந்தியர்களையும் மலேசியப் போலீசார் பிடித்துச் சென்று காவலில் வைத்தனர். தகவல் அறிந்தவுடன்அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் விரைந்து சென்று, அவர்களுடைய விசா காலம்முடியவில்லை என்பதை நிரூபித்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.
அவர்களில் சிலர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு தங்கள் நண்பர்களைப் பார்க்கவந்திருந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்குள்ள பெரும்பாலான இந்தியர்கள் "நாங்கள் இனிமேலும்மலேசியாவில் தங்க விரும்பவில்லை. மலேசிய கம்பெனிகள் அழைத்ததால்தான் இங்கு வேலைக்குவந்தோம். ஆனால் இங்குள்ள போலீசாரே இவ்வளவு கொடுமைப்படுத்துவார்கள் என்று நாங்கள்நினைக்கவே இல்லை. நாங்கள் உடனே இந்தியா கிளம்புகிறோம்" என்று கூறினர்.
ஆனால் இவர்களில் பெரும்பாலனவர்களின் விசாக்களை மலேசிய போலீசார்சேதப்படுத்தியுள்ளதால் அவர்கள் புதிதாக விசாவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும் என்றுவிசா அலுவலக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications