தமிழக போலீசில் "கறுப்பு ஆடுகள்": டி.ஜி.பி. எச்சரிக்கை
சென்னை:
கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரில சில "கறுப்பு ஆடுகளும்" உள்ளதாகவும் இவர்கள்கள்ளச் சாராய கும்பலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன் கூறியுள்ளார்.
மதுவிலக்குக் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த போலீசாருக்குப் பரிசு மற்றும் கேடயம் வழங்கும் விழாஇன்று சென்னையில் நடைபெற்றது. பரிசுகளை வழங்கி ராஜகோபாலன் பேசுகையில்,
மதுவிலக்கு போலீசார் கடந்த ஆண்டு மட்டும் 2,96,429 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இவை தொடர்பாக3,747 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எரிசாராயத்தில் மெத்தனால் கலந்து அதை மதுவாக விற்பது சட்டப்படி குற்றம். அப்படி விற்பவர்கள் மீதுகடுமையான நடவடிக்கையை மதுவிலக்கு போலீசார் எடுக்க வேண்டும். சாராய சாவே தமிழகத்தில் நடக்காதஅளவுக்கு போலீசார் நடந்து கொள்ள வேண்டும்.
மதுவிலக்கு காவல் துறையில் சில "கறுப்பு ஆடுகள்" உள்ளனர். அவர்கள் யார் என்று நான் சொல்ல மாட்டேன்.
போலீசார் கடமை உணர்வுடனும் நாணயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். நான்கு நல்லவற்றை நாம் செய்தால்40 நல்லது நடக்கும். கணக்கு காட்டுவதற்காக பொய் வழக்குகள் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்ராஜகோபாலன்.
கள்ளச் சாராய ஒழிப்பில் சிறந்த மாவட்டத்திற்கான பரிசை திருநெல்வேலி மாவட்டம் தட்டிச் சென்றது.அம்மாவட்ட எஸ்.பி. சத்தியமூர்த்தி அதற்கான பரிசையும் கேடயத்தையும் ராஜகோபாலனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
தர்மபுரி மாவட்ட எஸ்.பி. பெரியய்யா இரண்டாவது பரிசுக்கான கேடயத்தைப் பெற்றுக் கொண்டார். மேலும்கள்ளச் சாராய ஒழிப்பில் சிறப்பான பணியாற்றியதற்காக வேலூர் மாவட்ட டி.எஸ்.பி. எபிநேசருக்கு சிறப்புப் பரிசுவழங்கப்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications