கோவையில் கன மழை: வீடு இடிந்து தாய்-மகள்-மகன் பலி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் இன்று அதிகாலை பெய்த பெய்த கன மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒருபெண்ணும் அவருடைய மகனும், மகளும் பலியாகினர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் பலஇடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை கோயம்புத்தூரில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த கன மழைகாரணமாக பெரிய நாயக்கன் பாளையத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இடிந்த வீட்டின் சுவர் அருகில் இருந்தகுடிசை மீது பொலபொலவென்று சரிந்து விழ ஆரம்பித்தது.
அப்போது அந்தக் குடிசையில் இருந்தவர்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் தூங்கியநிலையிலேயே வீட்டின் இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண்ணும், அவருடைய 14 வயது மகளும், 12 வயது மகனும்உடல் நசுங்கி இறந்தனர்.
அந்தக் குடிசை வீட்டில் மேலும் ஆறு பேர் தங்கியிருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த ஆறு பேரும்சமீபத்தில் வெளியூர் சென்று விட்டதால் அவர்கள் இந்தச் சம்பவத்திலிருந்து தப்பினர்.
இறந்து போன மூன்று பேருமே நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. தீயணைப்புப் படையினர்விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சென்னையில் திடீர் மழை:
இதற்கிடையே சென்னையிலும் நேற்று இரவு முழுவதும் திடீர் மழை பெய்தது. இருப்பினும் பெரிய மழையாகஇல்லாமல் இரவு முழுவதிலும் தூறிக் கொண்டேதான் இருந்தது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. கோடை காலத்தை எப்படித்தான் சமாளிக்கப்போகிறோமோ என்று சென்னை மக்கள் வெறுத்துப் போயுள்ள நிலையில் நேற்று காலை லேசான தூறல் விழுந்தது.
ஆனால் தூறல் போட்டது அதிகாலை என்பதால் பலருக்கும் மழை பெய்ததே தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் பலத்த இடி இடித்தது. மிகப் பெரிய மழை வரப் போகிறது என்றுசென்னை மக்கள் பெருத்த ஆர்வமடைந்தனர்.
ஆனால் பெரிய மழையாக இல்லாமல் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. லேசாக பெய்ய ஆரம்பித்த மழைபோகப் போக தூறலாக மாறியது. அதிகாலை வரை இந்தத் தூறல் நீடித்தது.
இதனால் வெயிலின் கொடுமை ஓரளவு தணிந்து. சென்னை முழுவதும் லேசான குளுமை நிலவியது.
மதுரையிலும்...
இதற்கிடையே மதுரையிலும் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த பல வாரங்களாக மதுரையில் வெயில் நன்றாகக் கொளுத்தி வந்தது. ஆனால் நேற்று காலையிலிருந்தேமதுரையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது.
இதையடுத்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. இன்றும் இந்த மழைநீடித்தது. வைகை, பெரியாறு அணைகளில் நீர் மட்டம் உயர ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதைத் தொடர்ந்து, வெயிலின் கொடுமை நீங்கி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications