இந்தியர்களை மீட்டு வர விமான படை தயார்
திருவனந்தபுரம்:
வளைகுடாவில் உள்ள இந்தியர்களை தேவைப்பாட்டால் அஙகிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்து வரமத்திய அரசு பல நடவடிக்கைளை எடுத்துள்ளது.
ஈராக்கில் போர் வெடித்து அது வளைகுடாவின் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயமும் உள்ளது. குறிப்பாககுவைத்தை ஈராக் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலை உருவானால் குவைத்தில் உள்ள 3.5லட்சம் இந்தியர்களையும் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கும் பணி இந்திய விமானப் படையிடம்தரப்பட்டுள்ளது.
ஏர்-இந்தியா, இந்திய விமானப் படை, இந்தியன் ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின்விமானங்களைப் பயன்படுத்தி இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏர்-இந்தியாதலைமையில் இந்திய விமானப் படையின் நேரடிக் கண்காணிப்பில் இந்தியர்கள் திருப்பி அழைத்து வரப்படுவர்.
இந்திய விமானப் படையிடம் உள்ள மிகப் பெரிய ஐ.எல். ரக விமானங்களைத் தயார் நிலையில் வைக்குமாறுமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கமான கட்டணத்தில் வெறும் 20 சதவீதத்தை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களை இந்தியாஅழைத்து வரவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் திருவனந்தபுரம் மேலாளர் ரத்தன் கோஷ்நிருபர்களிடம் தெரிவித்தார்.
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகம் இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும். ரியாத்துக்குவந்துவிட்டால் அவர்களை பத்திரமாக இந்த விமானங்கள் இந்தியா கொண்டு வந்துவிடும். வளைகுடாவில் மற்றஇடங்களில் இருந்தும் விமானங்களை இயக்க அந் நாடுகளுடனும் இந்தியா பேசி வருகிறது.
ஈராக்குக்கு ஐ.நாவின் புதிய உத்தரவு:
இந் நிலையில் ஈராக் மேலும் சில வகையான ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என ஐ.நா. ஆயுதக்கண்காணிப்பாளர் ஹேன்ஸ் பிலிக்ஸ் கூறியுள்ளார்.
ஈராக்கில் இவர தலைமையிலான குழு ஆய்வு நடத்தி அங்கு பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இல்லை என அறிவித்தது.ஆனால், இதை ஏற்காமல் அமெரிக்கா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந் நிலையில் ஐ.நாவிடம் பிலிக்ஸ் 83பக்க புதிய உத்தரவுகளை சமர்பித்தார்.
அதில் ஈராக்குக்கு 12 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இப்போது போர் ஆரம்பிக்க உள்ளதால்பிலிக்சின் உத்தரவுகளை ஈராக் ஏற்காது என்று தெரிகிறது. இதற்கிடையே போர் அபாயத்தால் ஈராக்கில் பணியில்ஈடுபட்டிருந்த 132 ஆயுதக் கண்காணிப்பாளர்களும் குவைத்துக்குத் திரும்பிவிட்டனர்.
ரசாயன ஆயுதங்கள் சப்ளை?
தங்களைத் தாக்க, தனது படையினருக்கு ஈராக் ரசாயன ஆயுதங்களை சப்ளை செய்ய ஆரம்பித்துவிட்டதாகஅமெரிக்கா திபுகார் கூறியுள்ளது. ஆனால், இதை ஈராக் மறுத்துள்ளது.
சதாம் ஹூசேனின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையான ரிபப்ளிகன் படைகளுக்கு இந்த ஆயுதங்கள்வழங்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், இது பொய்யான பிரச்சாரம் என ஈராக் தகவல்துறை அமைச்சர் சைத் அல்- சகாப் கூறினார்.












Click it and Unblock the Notifications