தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை: திருநாவுக்கரசர் வருத்தம்
திருச்சி:
தமிழக அரசியல்வாதிகளிடையே அரசியல் நாகரிகம் வளர வேண்டும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறைஇணை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கேரளாவில் யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் மாநிலஅமைச்சர்களும் ஆளுங்கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்வார்கள். அந்த இடத்தில் கட்சிபாகுபாடு பார்க்க மாட்டார்கள். அது பா.ஜ.கவாக இருந்தாலும் சரி. காங்கிரஸாக இருந்தாலும் சரி.
ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இல்லை. அரசியல் பண்பாடு, நாகரிகம் இங்கு இல்லை. மத்திய அமைச்சர்கள்கலந்து கொள்ளும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வதில்லை. இதுமிகவும் வருந்தத்தக்கது.
தமிழகத்தில் விரைவில் 1 கோடி பி.எஸ்.என்.எல். செல் போன் இணைப்புகள் விரைவில் வழங்கப்படும். நாட்டில்மொத்தம் 30 தனியார் செல் போன் நிறுவனங்கள்உள்ளன. இவற்றிற்கு இணையாக பி.எஸ்.என்.எல். செல்போன்களிலும் படிப்படியாக சலுகைகள் வழங்கப்படும்.
செல் போன்களின் பெருக்கத்தால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு பாதிப்பு இல்லை. தொலைபேசி கேட்டு பதிவுசெய்வோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. மனு கொடுத்தவுடன் இணைப்பு என்பதால் தொலைபேசி கோரிவரும் விண்ணப்பங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன என்றார் திருநாவுக்கரசர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications