பி.ஈ. அட்மிஷன்: சட்டசபையில் பா.ம.க வெளிநடப்பு
சென்னை:
தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு முறையில் இடங்களை நிரப்புவதற்கானபுதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பானவிவகாரத்தில் அரசின் நிலையைக் கண்டித்து சட்டசபையிலிருந்து பாமகவினர் இன்று வெளிநடப்புசெய்தனர்.
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அறவிப்பில், அரசு உதவி பெறாத சிறுபான்மை அல்லாததனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும், அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்லூரிகளில்70 சதவீத இடங்களையும் அந்தந்த கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளலாம் என்றுதெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு எதிர்க் கட்சிகள் தங்களின் எதிர்ப்புக்களையும்,கண்டனங்களையும் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு முறையில் இடங்களைநிரப்புவதற்கான புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பிளஸ் டூ மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டரேங்க் பட்டியலின் படிதான் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் அல்லது அந்தந்த தனியார் கல்லூரிகளே நடத்தும் நுழைவுத் தேர்வுமதிப்பெண்களைக் கொண்டு இந்த ரேங்க் பட்டியலைத் தயார் செய்யலாம்.
ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு இவற்றில் ஏதாவது ஒன்றையேமுழுமையாகப் பின்பற்றி மாணவ, மாணவிகளைச் சேர்க்க வேண்டும்.
அதாவது அனைத்து மாணவ, மாணவிகள் சேர்ப்பிலும் ஒரே நுழைவுத் தேர்வுமதிப்பெண்களைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின்நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைப் பின்பற்றுகிறோமா அல்லது தாங்களே நடத்தும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களைப் பின்பற்றுகிறோமா என்பதைப் பத்திரிக்கைகளில் தனியார் கல்லூரிகள்அறிவிக்க வேண்டும்.
மேலும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்பும்போது தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக்கொள்கைகளைத் தனியார் கல்லூரிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்காக விண்ணப்பித்த அனைத்துமாணவ, மாணவிகளின் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல்கள், நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள், ரேங்க்பட்டியல், ஜாதி விவரம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் முழு விவரம் ஆகியவற்றைஅண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்க வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகிவற்றைச் சரிபார்த்து விட்டுஅசல் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களிலிருந்து கவுன்சலிங் முறையில் மாணவ, மாணவிகள்சேர்க்கைக்கு இடங்களை அளிக்க விரும்பினால், அது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர்சேர்க்கைப் பிரிவுச் செயலாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணம் மற்றும் எதற்காக அந்தக் கட்டணம்வசூலிக்கப்படுகிறது ஆகியவை குறித்து தனியார் கல்லூரிகள் அறிவிக்க வேண்டும் என்று அந்தசெய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சட்டசபையில் பாமக வெளிநடப்பு:
இதற்கிடையே தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடர்பாக சட்டசபையில்இருந்து பாமகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் பாமக தலைவர் ஜி.கே. மணி எழுந்து தனியார்கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடர்பாக விவாதிப்பதற்காக அனுமதி கோரினார்.இது தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அது பற்றிப் பேசுவதற்கு சபாநாயகர் காளிமுத்து அனுமதி அளிக்க மறுத்தார். மேலும்ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டுவர முடியாது என்றார் அவர்.
இதையடுத்து முன் வரிசைக்கு விரைந்து வந்த பாமக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்த படியே அரசுக்குஎதிராகக் கோஷங்களை எழுப்பினார்கள். "நீதி வேண்டும்", "ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைஅழிக்காதே" என்பன உள்ளிட்ட கோஷங்கள் அப்போது எழுப்பப்பட்டன.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத சபாநாயகர், நிதி அமைச்சர் பொன்னையனைப்பேசுமாறு அழைத்தார். இதையடுத்து கடுப்பாகிப் போன பாமக உறுப்பினர்கள் கோஷங்களைத்தொடர்ந்து எழுப்பியவாறே அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நுழைவு தேர்வு- கடைசி தேதி நீடிப்பு:
இதற்கிடையே பி.ஈ., எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வுகளுக்காக ஆன்லைன் மூலம் வரும் 28ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஆன்லைன் மற்றும் தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் கடந்த 22ம் தேதியுடன் முடிந்து விட்டது.
இந்நிலையில் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் செய்வதற்கான காலக் கெடுநீட்டிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வுகள் அடுத்த மாதம் 12, 13ம் தேதிகளில் நடைபெற உள்ளன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications