கொப்பரை தேங்காய் ஊழல்: திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் ரெய்ட்
திண்டுக்கல்:
திமுக ஆட்சி காலத்தில் நடந்தாகக் கூறப்படும் கொப்பரைத் தேங்காய் ஊழல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டகூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும் 4 தேங்காய் வியாபாரிகள் வீட்டிலும் ரெய்ட் நடந்தது.
திமுக ஆட்சியின்போது விவசாயிகளிடம் இருந்து பல்கோடி ரூபாய்க்கு தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.தேங்காய் அதிக அளவில் உற்பத்தியாகியும் அதற்கு உரிய விலை கிடைக்காததால் ஆயிரக்கணக்கானவிவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து அந்த விவசாயிகளுக்கு உதவ அரசே தேங்காயை கொள்முதல் செய்ய முன் வந்தது. மாவட்டக்கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்தத் தேங்காய்களை அரசு வாங்கியது. ஆனால், இதில் தான் பெருமளவில் ஊழல்நடந்ததாகத் தெரிகிறது.
திமுகவினரின் தலையீட்டால் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் வாங்குவதற்குப் பதிலாக தேங்காய் மண்டிகள்நடத்தி வரும் வியாபாரிகளிடமும், இடைத் தரகர்களிடமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு தேங்காய்கள்வாங்கப்பட்டன.
இதனால் விவசாயிகளுக்கு உதவ உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும்கிடைக்காமல் போனது. தேங்காய் மொத்த வியாபாரிகளும் இடைத் தரகர்களும் தான் இதில் லாபமடைந்தனர்.
மேலும் கூட்டுறவு வங்கிகளிலும் இந்தத் தேங்காய் கொள்முதலை வைத்து பணம் சுருட்டப்பட்டது. தேங்காயைகிலோ ரூ. 22.50க்கு வாங்கிவிட்டு கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் ரூ. 32.50க்கு வாங்கியதாக காட்டப்பட்டன.இதற்கான போலி பில்களும் தயார் செய்யப்பட்டன.
திமுக ஆட்சியின்போதே இந்த விவகாரம் வெடித்தது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக உடனே இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தான் இந்த ஊழல் பெருமளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள காபித் தோட்ட உரிமையாளர்கள் சங்க கூட்டுறவுவங்கியின் முன்னாள் தலைவர் சிவஞானத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். இவர்திமுகவைச் சேர்ந்தவராவார்.
இது தவிர தேங்காய் மொத்த வியாபாரிகள் வீட்டிலும் ரெய்ட் நடந்தது. ஆனால், இதில் என்ன பிடிபட்டது என்றவிவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications