நெஞ்சு வலிக்கு மருந்து வயிற்று வலி: சென்னையில் போலி டாக்டர் கைது!
சென்னை:
சென்னையில் 5 ஆண்டு காலமாக டாக்டர் தொழில் பார்த்து வந்த போலி டாக்டர் கைதுசெய்யப்பட்டார். இவர் ஓராண்டு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படித்தவராவார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ராமசேகர். இவர் சென்னை கொருக்குப்பேட்டை, கண்ணதாசன் நகர்ஆகிய பகுதிகளில் வாசு கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனைகள் நடத்தி வந்தார்.
ராமசேகர் எம்.பி.பி.எஸ் என்ற போர்டும் தொங்கவிட்டு அதே பெயரில் லெட்டர் ஹெட்டும் அடித்துவைத்து மருத்துவம் பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் இவரிடம் லட்சுமணன் என்பவர் நெஞ்சுவலியுடன் சிகிச்சைக்காக வந்தார்.
அப்போது ராமசேகர் கொடுத்த மருந்துகளினால் அவரது உடலில் பல்வேறு உபாதைகள் வந்தன.கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர் வேறொரு டாக்டரிடம் போனார்.
அப்போது டாக்டர் ராமசேகர் கொடுத்த மருந்துகளை வாங்கிப் பார்த்த ஒரிஜினல் டாக்டர் மிரண்டுபோனார். நெஞ்சு வலிக்கு சம்பந்தமே இல்லாத மருந்துகளை அவர் எழுதித் தந்திருந்தார்.
ராமசேகர் குறித்து தனது சந்தேகத்தை அந்த டாக்டர் வெளிப்படுத்த உடனே லட்சுமணன் இதுதொடர்பாக ஆர்.கே. நகர் போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ராமசேகரிடம்போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலி டாக்டர் என்று தெரிய வந்தது. வெறும் பிளஸ் டூ மட்டுமே படித்துள்ளஅவர் அப்போதே தனது ஜாதிச் சான்றிதழைத் திருத்தி தன்னை தலித் என்று காட்டி ஸ்டான்லிமருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
ஆனால், அவரது சான்றிதழ் போலியானது என்று தெரிந்தவுடன் அவரை ஓராண்டிலேயேகல்லூரியில் இருந்து நீக்கியது நிர்வாகம். இது தொடர்பாக சில நாட்களில் ஜெயலில் இருந்துவிட்டுவந்த ராமசேகர் தனது ஓராண்டு மருத்துவக் கல்லூரி அனுபவத்தை வைத்து டாக்டர் தொழிலைஆரம்பித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ராமசேகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications