திமுக தேர்தல் முடிந்தது: பொது குழுவில் சலசலப்பு ஏற்படுத்த அதிமுக திட்டம்
சென்னை:
சென்னை மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், கடந்த 2 வருடமாக நடந்துவந்த திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
சென்னை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நேற்று நடந்து முடிந்தன.
தென் சென்னை மாவட்டச் செயலாளராக ஸ்டாலினின் அன்பைப் பெற்ற எம்.எல்.ஏ. அன்பழகன்தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் இதுவரை கருணாநிதியின் தீவிர ஆதரவாளரான சைதைகிட்டு இருந்து வந்தார்.
மிக நீண்ட காலமாக இப்பொறுப்பில் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அன்பழகனுக்கு இந்தப் பதவியைத் தரஸ்டாலின் நெருக்குதல் தந்தார்.
இதையடுத்து கிட்டுவை விலகி இருக்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார். கருணாநிதியின் தீவிரவிசுவாசியான கிட்டு அதை ஏற்று தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
வட சென்னை மாவட்டச் செயலாளராக பலராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை நீக்கிவிட்டுவேறொருவரைப் போட முயற்சி நடந்தது. ஆனால், தனது பண பலத்தால் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுவிட்டார் பலராமன்.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இப்பதவிக்கு வருவது 4 வது முறையாகும்.
இத்துடன் திமுக உட்கட்சித் தேர்தல் முடிவடைந்தது.
அடுத்த கட்டமாக ஜூன் 2ம் தேதி கட்சியின் புதிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் திமுகவின்பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.
அப்போது தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளுக்கான தேர்தல்நடைபெறும்.
தலைவராக கருணாநிதியே மீண்டும் தேர்வாவார். அதே போல பொதுச் செயலாளர் பதவியைஅன்பழகனே மீண்டும் பெறுவார்.
ஆனால், பொருளாளர் பதவியில் ஆற்காடு வீராசாமி நீடிப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.அவரை கொஞ்ச காலமாகவே கருணாநிதி ஒதுக்கியே வைத்துள்ளார்.
இந்தப் பதவியைப் பிடிக்க ஸ்டாலின் ஆதரவாளர்களான பொன்முடி ஆர்வம் காட்டி வருகிறார்.மேலும் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் போன்ற பெருந்தலைகளும் இந்தப் பதவியின் மீது கண்வைத்து கொஞ்ச காலமாகவே கருணாநிதியயை நச்சரித்து வருகின்றனர்.
இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு பதவி வழங்கப்படுமா அல்லது தொல்லையில் இருந்து தப்பமீண்டும் வீராசாமியையே கருணாநிதி பொருளாளராக நிறுத்துவாரா என்று தெரியவில்லை.
பொதுக் குழுக் கூட்டத்தில் தா.கி.விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று அதில்கலந்துகொள்பவர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதிருப்தியில் உள்ள சிலரைத் தூண்டிவிட்டு தா.கி. விவகாரத்தைக் கிளப்ப வைத்து பொதுக்குழுக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சிகளில் அதிமுக ஈடுபட்டுள்ளதாகவும் திமுகதலைமைக்குத் தகவல் வந்துள்ளது.
இதனால் பொதுக் குழுக் கூட்டம் மிகப் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications