அமெரிக்க பெண்ணை கையை பிடித்து இழுத்து வம்பு செய்த இன்ஸ்பெக்டர்!
சென்னை:
சென்னைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளார்அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் இரிகா கெர்மேன்டக். இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார். ஒரிசாவில் சுற்றுப் பயணம் செய்தபோது சுனில்குமார் என்ற வாலிபருடன்அவருக்கு காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் சேர்ந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்த அவர்கள் சென்னை அம்பத்தூரில் வீடு பார்த்துசேர்ந்து வசிக்கத் தொடங்கினர்.
வெள்ளைக்காரப் பெண்ணும்,நம் ஆள் ஒருவரும் சேர்ந்து வாழ்வதைப் பார்த்து அக்கம் பக்கத்தில்இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சும்மா இருந்தவர்கள் வாய்க்கு அவல் கிடைத்தது மாதிரிஅருகாமை வீட்டினர் எப்போதும் இந்த இருவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
சிலர் அதிக உணர்ச்சிவசப்பட்டு அம்பத்தூர் காவல் நிலையத்தில் போய் இதுதொடர்பாகபுகார்கொடுத்தனர்.
வழக்கமாக கொலை கேஸ் என்றாலே ஆற, அமரத் தான் வரும் நம் போலீசார் இதை பெரியவிவகாரமாக எடுத்துக் கொண்டு அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் உடனேவிரைந்து வந்தனர்.
அந்த அமெரிக்கப் பெண்ணிடமும் சுனிலிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அமெரிக்கப் பெண் முழு விவரத்தையும் சொன்னார். சுனிலை திருமணம் செய்யஇருப்பதையும் கூறினார். மேலும் இந்தியாவில் தங்கியிருக்க அவரிடம் உரிய ஆவணங்களும்இருந்தன.
இதையடுத்து பேசாமல் திரும்பி இருக்க வேண்டிய போலீசார் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து வம்புசெய்தனர். அந்தப் பெண்ணை தமிழில் திட்டிய கிருஷ்ணன் கையைப் பிடித்தும் இழுத்து அசிங்கம்செய்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மீது அந்த அமெரிக்கப் பெண் புகார் கொடுத்துள்ளார்.மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கரை நேரில் சந்தித்த அவர் தனது புகாரை அளித்தார்.
தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசியும், கையைப் பிடித்தும்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வம்பு செய்தார் என்று அதில் இரிகா கூறியுள்ளார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனை அழைத்து எஸ்.பி. சங்கர் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்கப் பெண்ணிடம் காசு பறிக்கலாம் என்று நினைத்து அது முடியாமல் போனதால் அவரிடம்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வெட்டி வம்பு இழுத்ததாகக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications