ராமராஜனுக்கு உதவுவதாக ஜெ. உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வரும் நடிகர் ராமராஜனின் நிலையை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அவரை நேரில்அழைத்துப் பேசினார். அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

துணை இயக்குனராக அறிமுகமாகி மண்னுக்கேத்த பொண்ணு மூலம் இயக்குனராகி, நம்ம ஊரு நல்ல ஊருபடத்தில் ஹீரோவாகி, எங்க ஊரு பாட்டுக்காரன் மூலம் பாப்புலராகி, கரகாட்டக்காரன் மூலம் சூப்பர் ஸ்டார்லெவலுக்கு வந்தவர் ராமராஜன்.

துணை இயக்குனராக இருந்தபோதே நடிகை நளினியுடன் காதல் வந்தது. ராமராஜன் ஹீரோவான பிறகு இருவரும்வீட்டை விட்டு ஓடித் திருமணம் செய்து கொணடார். இரட்டைக் குழந்தைகளாக மகன், மகள் பிறந்தனர்.

மதுரையில் 3 தியேட்டர்கள், சென்னையில் 2 பங்களாக்கள் என சொத்துக்களைக் குவித்தார்.

பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். அவரை திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தினாஜெயலலிதா. வென்று எம்.பியும் ஆனார்.

ஆனால், நளினியுடன் ஏற்பட்ட விவாகரத்துக்குப் பின் ராமராஜனின் வாழ்க்கையில் தொடர்ந்து சறுக்கல்கள்.அடுத்தடுத்து அவர் எடுத்த படங்கள் பெரும் தோல்வியடைய கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கினார். இதனால்தியேட்டர்கள், வீடுகளை விற்றார்.

இருப்பதை எல்லாம் இழந்துவிட்ட ராமராஜன் இப்போது மேற்கு மாம்பலத்தில் வாடகை வீட்டில் வசிக்கிறார். வீட்டுவாடகையையும் கூட கட்ட முடியாமல் திணறி வருகிறார். மதுரைக்குப் போய் தனது தாயாரைப் பார்க்கக் கூடகையில் 150 ரூபாய் கூட இல்லை என கண் கலங்கி பேட்டி அளித்திருந்தார் ராமராஜன்.

ராமராஜனின் இந்த நிலையை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அவரை நேற்று ஆள் அனுப்பி போயஸ்தோட்டத்துக்கு வரவழைத்தார். அப்போது ஜெயலலிதாவிடம் அழுதபடி தன் நிலையை ராமராஜன் விளக்கியதாகத்தெரிகிறது.

இதையடுத்து உரிய உதவிகள் செய்வதாகக் கூறி திருப்பி அனுப்பினார். இதன் பின்னர் நிருபர்களிடம் பேசியராமராஜன்,

என் நிலையை உணர்ந்த அம்மா (ஜெயலலிதா) நேரில் அழைத்து என்ன நடந்தது என்று கேட்டார். நான் கஷ்டநிலைக்கு வந்தததை விளக்கினேன். இதையடுத்து எல்லாவற்றையும் நான் சரி செய்கிறேன். இரண்டு நாட்களில்திரும்பவும் அழைக்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். இப்போதே என் கஷ்டம் எல்லாம் விலகிவிட்டதைப்போல உணர்கிறேன் என்றார் ராமராஜன்.

பெரும் கஷ்டத்தில் இருந்த ராமராஜனுக்கு ஒரு கட்டத்தில் இசைஞானி இளையராஜாவும் பெருமளவில்உதவியதாகத் தெரிகிறது. ஆனால், ராமராஜனால் வாழ்வு பெற்றவர்கள் யாரும் அவரைக் கண்டுகொள்ளாமல்விட்டுவிட்டது தான் சோகம்.

கரகாட்டக்காரன் படம் தமிழகத்தில் அள்ளிய வசூல் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. அந்தப் படம்வந்தபோது அதுவரை இவ்வளவு வசூல் பண்ணிய படமே இல்லை என்ற நிலை இருந்தது.

மதுரையில் நடனா, நாட்டினா, நர்த்தனா தியேட்டர்களில் ஒரு வருடத்துக்கும் மேல் அப் படம் ஓடியது.இதையடுத்து அந்தத் தியேட்டர் காம்ப்ளக்ஸையே வாங்கினார் ராமராஜன்.

நளினியுடன் விவாகரத்து ஏற்பட்டபோது அவருக்கு ஜீவனாம்சமாக ரூ. 10 லட்சமும், குழந்தைகள் பெயரில்பெரும் பணத்தையும் முதலீடு செய்யவும் ராமராஜனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தப் பணத்தைக் கூடஅவரால் வழங்க முடியவில்லை என்று தெரிகிறது.

கிராம நாயகன் என்று ஒரு பக்கம் பாராட்டும், சிலரால் ஏளனமாகவும் விமர்சிக்கப்பட்டு வந்த ராமராஜன் நிஜவாழ்க்கையில் சந்தித்துள்ள சோகம் திரையுலகினருக்கு ஒரு பாடம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+