சென்னையில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். முக்கிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அயோத்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் இன்றுசென்னையில் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரு நாள் கூட்டம் நடக்கிறது. காலை தொடங்கிய இக்கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் அதன் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பொதுச் செயலாளர்களான பிரமோத் மகாஜன்,சஞ்சய் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான மதன்தாஸ் தேவி, மோகன் பகத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள்கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இக் கூட்டம் நடந்து வருகிறது. சமீபத்தில் தான் கன்னியாகுமரியின் ஆர்.எஸ்.எஸ்.தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது. அதில் அயோத்தி விவகாரத்தில் பா.ஜ.க. அரசுக்கு பல்வேறுநிபந்தனைகளை விதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அயோத்தியில் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும், இல்லாவிட்டார் பிரதமர் வாஜ்பாய்பதவி விலக வேண்டும் என்று அக் கூட்டத்தில் வி.எச்.பி. தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சமாதானப்படுத்த அந்த அமைப்பின் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர்கள்கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். தான்பா.ஜ.கவின் தாய் வீடு. இதனால் இந்த ஆலோசனைகள் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அயோத்திவிவகாரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தின் மதிப்புக்குரிய தலைவர் எடுத்த முயற்சிகள்தோல்வி அடைந்துவிட்டதாகப் பேசப்படுகிறது.

ஜெயேந்திரர் தெரிவித்த திட்டம் இன்னும் கூட பரிசீலனைக்குரியதுதான். அதை இஸ்லாமிய தலைவர்கள் சரிவரபயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது என்றார்.

வாஜ்பாய் விலக மாட்டார் ..

பிரதமர் பதவியிலிருந்து வாஜ்பாயை விலகச் சொல்ல, மக்களைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது.அவர் விலகவும் மாட்டார் என்று பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக வாஜ்பாய் விலகவேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் கேருவதில் நியாயமில்லை. வாஜ்பாயையும், தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சியையும் மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள்.

அவர்களது எதிர்பார்ப்புக்கேற்ப தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. கூட்டணிக்கட்சிகளை மீறி பா.ஜ.க. எதையும் செய்ய முடியாது. இந் நிலையில் வாஜ்பாயை பதவி விலகச் சொல்ல விஸ்வ இந்துபரிஷத் அமைப்புக்கு அதிகாரம் இல்லை.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரும் யோசனை இல்லை. தேசியஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மீது எந்த முடிவையும் நாங்கள் திணிக்க மாட்டோம்.

பா.ஜ.கவைப் பொருத்தவரை வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதில்தான் முழு கவனத்தையும்செலுத்தி வருகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+