சென்னையில் ஆட்டோ வேட்டை தொடர்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை

சென்னை நகரில் முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து வந்த போக்குவரத்துப்போலீஸார் இப்போது புறநகர்ப் பகுதிகளில் தங்களது தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு ஆட்டோக்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதனால் அவற்றை முறைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.

சென்னை நகரில் மட்டும் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஓடி வந்த சுமார் 2,000 ஆட்டோக்கள் பிடிபட்டன.சரியான ஆவணங்களுடன் ஓடும் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதேபோன்ற ஆட்டோ நடவடிக்கை புறநகர்ப் பகுதிகளிலும் இப்போது ஆரம்பித்துள்ளது.

பல்லாவரம், மீனம்பாக்கம், பரங்கிமலை பகுதிகளில் போக்குவரத்துப் போலீஸார், ஆட்டோக்களை மடக்கிசோதனை நடத்தினர். இதில் முறையான ஆவணங்கள் இல்லாத 300 ஆட்டோக்கள் பிடிபட்டன.

டிரைவர் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டப்பட்ட ஆடோக்கள், பெர்மிட் இல்லாத ஆட்டோக்களும் பறிமுதல்செய்யப்பட்டன.

பிடிபட்ட ஆட்டோக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சரியானஆவணங்களைக் காட்டினால் தான் ஆட்டோக்கள் திரும்பத் தரப்படும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+