கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 2 பேர் வெட்டிக் கொலை
திருச்சி:
திருச்சி பொன்மலைப்பகுதியில் கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
திருச்சி, பொன்மலை பகுதியில் உள்ள கணேசபுரத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சாமிகும்பிடுவது தொடர்பாகவும், கரகாட்ட நடனம் தொடர்பாகவும் இரு தரப்பினருக்கிடையே நேற்று மாலைவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அடிதடியும் நடந்தது.
பொது மக்கள் சமரசம் செய்ய, அத்தோடு கலைந்து சென்ற ஒரு தரப்பினர் மீண்டும் இரவில் பயங்கரஆயுதங்களுடன் திரும்பி வந்தனர். மற்றொரு தரப்பினர் கோவில் திருவிழா பந்தலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது திடீரென பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் திராவிட மணி மற்றும் பிரபாகரன் ஆகியோர் அந்த இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டனர். மேலும 7பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அக் கும்பல் தப்பியோடிவிட்டது.
கொலையாளிகளைப் பிடிக்க சிறப்புப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications