முதல்வரின் அதிரடிப்படை வீரர் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்த அதிரடிப்படை வீரர் சாலை விபத்தில்பலியானார்.
ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவில் கமாண்டோவாக பணியாற்றியவர் சுந்தரமூர்த்தி. 37 வயதான இவர்,போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
ஊரிலிருந்து வந்திருந்த உறவினர்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழியனுப்பி விட்டு விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினார். கோட்டூர்புரம் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது வேகமாக வந்த வாகனம்ஒன்று மோதியது.
இதில் தூக்கி எறியப்பட்ட சுந்தரமூர்த்தி படுகாயமடைந்து பலியானார்.
அவரது குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 1 லட்சம் நிதியுதவியையும்அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications