ஜாதியின் பெயரால் காமக் கொடூரர்கள் வெறியாட்டம்: 50 வயது பெண்ணையும் கற்பழிக்கும் கொடுமை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

மாலை வந்து விட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கண்ணில் படும் பெண்களைகற்பழிக்கிறது ஒரு கூட்டம். இது ஏதோ உகாண்டாவில் நடக்கும் சம்பவம் அல்ல. தமிழகத்தின் கடலூர்மாவட்டத்தில் உள்ள குக் கிராமத்தில் தினசரி நடந்து வரும் அவலம் இது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது சிறுதொண்டமாதேவி கிராமம். இந்தக் கிராமத்தில் வன்னியர்களும்,தாழ்த்தப்பட்டவர்களும், பிற ஜாதியினரும் அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்களில் பாவப்பட்டவர்கள்தான்இந்த தாழ்த்தப்பட்டவர்கள்.

மேல் ஜாதிக்காரர்களின் ஜாதி துவேஷத்திற்கு ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.இந்தியாவிற்குக் கிடைத்த சுதந்திரம் இந்த மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

இந்தக் கிராமத்தின் பெரிய ஜாதிக்காரர்களுக்கு (அப்படித்தான் உயர் ஜாதிக்காரர்களை அழைக்க வேண்டுமாம்)பல பழக்க வழக்கங்கள். அவற்றை தாழ்த்தப்பட்ட மக்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.

இல்லாவிட்டால் அடி, உதை, கொலை. மேலும் கிராமத்துப் பஞ்சாயத்தைக் கூட்டி அபராதம் விதிப்பது, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது என அடாவடி தண்டனைகள் அரங்கேற்றப்படும்.

மாலை வந்து விட்டாலே கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கிலி கிளம்பி விடும். தாழ்த்தப்பட்டமக்கள் வசிக்கும் பகுதிக்குள், குடித்து விட்டு நுழையும் மேல் ஜாதிக்காரர்கள், ஏதாவது குடிசைக்குள் புகுவார்கள்.

அங்கு எந்தப் பெண் இருந்தாலும், அந்தப் பெண், அவருக்கு சுகம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால்கற்பழிப்புதான்.

இப்படியே இரவு முழுவதும் விளையாடுவார்கள் இந்த உயர்ஜாதிக்காரர்கள். இதை யாராவது தட்டிக் கேட்டால்அவ்வளவுதான், பெரிய குண்டர் படையே வந்து அடித்து துவம்சம் செய்து விடும்.

இதில் பல பேர் உயிரையே விட்டிருக்கிறார்களாம். தங்கள் வீட்டுப் பெண்களை நாசம் செய்யும் மேல்ஜாதிக்காரர்களை தட்டிக் கேட்ட பல ஆண்கள் பயங்கரமாக தாக்கப்பட்டு ஊனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றுஅச்சத்துடன் கூறுகிறார்கள் கிராம மக்கள்.

இந்தக் கொடுமையில் இருந்து 50 வயதுப் பெண்களும் தப்பவில்லை என்பது தான் சோகத்தின் உச்சகட்டம். வயதுவித்தியாசம் பார்க்காமல் தினசரி பாலியல் கொடூரங்கள் இங்கு நடைபெறுவது நெஞ்சை பதற வைக்கிறது.

இந்தக் கொடுமைகளால் இளம் பெண்களை சென்னைக்கும், பிற இடங்களுக்கும் அனுப்பி வைத்து விட்டுநரகத்தை அனுபவித்து வருகிறார்கள் பரிதாபத்துக்குய தாழ்த்தப்பட்ட மக்கள்.

தங்களது கொடுமைக்கு விடிவு காலம் வராதா என்ற ஏக்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் முதல்வரின் புகார்பிரிவு வரை மனு கொடுத்து விட்டார்கள். இதுவரை வெளிச்சம் வரவில்லை.

இளம்பெண்களே இல்லாத கிராமம் என்று அழைக்கக் கூடிய நிலையில் அவலமாக கதறிக் கொண்டிருக்கும்சிறுதொண்டமாதேவி கிராமத்திற்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்றும் தெரியவில்லை.

இந்தக் கொடுமைக்கு மிக முக்கியமான காரணம் பிற ஜாதிகளின் பலமும், போலீசும் தான் என்கின்றனர்தாழ்த்தப்பட்டவர்கள். மேல்ஜாதியினருக்கு கூஜா தூக்கவே காக்கிச் சட்டைகளுக்கு நேரம் போதவில்லைஎன்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+