சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் 14ம் தேதி வரை மாணவர்கள் சேர அனுமதி
சென்னை:
சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் வரும் 14ம் தேதி வரை மாணவர்கள் சேரலாம் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் கடந்த 27ம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு மேல் சிங்கிள்விண்டோ முறையில் நடந்த கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனாலும். 21,500 இடங்கள்காலியாகவே உள்ளன.
இந்த இடங்களை அந்தந்தக் கல்லூரிகளிடமே அண்ணா பல்கலைக்கழக ஒப்படைத்துவிட்டது.
மேலும் மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 5,000 இடங்கள்காலியாக உள்ளன. இதனால் மொத்தம் 26,500 இடங்கள் காலியாகக் கிடக்கின்றன.
இந்த இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க வரும் ஜூலை 14ம் தேதி வரை கல்லூரிகளுக்கு அண்ணாபல்கலைக்கழகம் அனுமதியளித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி அளித்தபேட்டி:
சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை வரும் ஆகஸ்டு 14ந் தேதி வரை நிரப்பலாம்.ஆகஸ்டு 14ம் தேதி மாணவர் சேர்க்கையை முடித்த பின்னர் 18ந் தேதிக்குள் சுயநிதி பொறியியல் கல்லூரிகள்மாணவர் சேர்க்கை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தக் கல்லூரிகள் ஒரு நுழைவு தேர்வை நடத்தி அதில் வெற்றி பெறுவோரின் ரேங்க் பட்டியல்படி தான்மாணவர்களை சேர்க்க வேண்டும்.
நாங்கள் விதித்த நிபந்தனைபடி சேர்க்கை அமையாவிட்டால், நாங்கள் திருப்தி அடையவிட்டால் எந்த ஒருகல்லூரியின் மாணவர் சேர்க்கையையும் மறுக்கும் உரிமை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உண்டு என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications