திருப்பதியில் மீண்டும் ஒரு குடும்பம் தற்கொலை
திருப்பதி:
திருப்பதி திருமலையில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். கடன்தொல்லை காரணமாக இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
திருப்பதியில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்துக் கொண்டு வருகிறது.சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே மரத்தில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்துகொண்டனர்.
இந் நிலையில் அங்கு மீண்டும் ஒரு குடும் தற்கொலை நடந்துள்ளது.
சென்னை போரூரைச் சேர்ந்தவர்கள் எழுமலை (65), இவரது மகள் பத்மினி (35), மகன் ராமகிருஷ்ணன் (43). 3பேரும் திருப்பதிக்குச் சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திருமலையில் உள்ள முதலாவது புதுச் சத்திரம் என்றஇடத்தின் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
சாவதற்கு முன்பு எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பில், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால் இந்தமுடிவுக்கு வந்ததாக 3 பேரும் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications