ஹெராயின் கடத்திய தம்பதிக்கு 15 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான கணவன், மனைவிக்கு விதிக்கப்பட்ட 15ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜ்ஒன்றிலிருந்து பால்சாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள2கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பால்சாமி. இதேபோல, 2000-மாவதுஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பால்சாமியின் மனைவி கிளாடிஸ் லில்லி கோர்ட்டில் சரணடைந்தார்.
இவர் மத்திய கலால்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இருவர் மீதும் மதுரைஅத்தியாவசியப் பொருள் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
அதில் இருவருக்கும் தலா 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடந்த 2000மாவது ஆண்டுசெப்டம்பர் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மனுவைவிசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், இருவருக்கும் விதிக்கப்பட்ட 15 ஆண்டு கடுங்காவல்தண்டனையை உறுதி செய்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கவும்உத்தரவிட்டார்.
தனது தீர்ப்பின்போது, போதைப் பொருள் கடத்துபவர்களைப் பிடிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தஇவர்களே போதைப் பொருள் கடத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இவர்களுக்கு கருணை காட்ட வேண்டியதில்லை. சிறிதளவு கூட அனுதாபம் காட்ட வேண்டியஅவசியம் இல்லை. இவர்களது செயல் அதிர்ச்சி தருகிறது, சமூக விரோதிகளுக்கும் இவர்களுக்கும்வித்தியாசம் இல்லை என்று கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications