அழகிரியின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ஜாமீன்மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தன்னை ஜாமீனில் விடக் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அழகிரி மனு செய்தார். அங்கு அதுநிராகக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் நிராகக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் உயர் நீதிமன்றத்திலேயே இன்னொரு ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி கனகராஜ் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் வாதாடிய அழகிரியின் வழக்கறிஞர்,
வழக்கு விசாரணை முடிந்த பின்னரும் கூட போலீஸார் குற்றப் பத்திக்கை தாக்கல் செய்வதை தாமதப்படுத்திவருகிறார்கள். உள் நோக்கத்துடன், வேண்டும் என்றே இவ்வாறு செய்கிறார்கள். குற்றப் பத்திரிக்கை தாக்கலாகும்வரை அழகிரிக்கு ஜாமீன் தரக் கூடாது என்று கூறி வரும் போலீஸ், அதைத் தாக்கல் செய்வதை வேண்டுமென்றேஇழுத்தடித்து வருகிறது.
எனவே அழகிரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
ஆனால், இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவரிடமும்வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது. எனவே அழகிரியை ஜாமீனில் விடக் கூடாது என்று அரசு வழக்கறிஞர்வாதாடினார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடிந்தது. ஆனால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications