வெறி நாய்க்கு கண்ணைப் பறிகொடுத்த சிறுவன்
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வெறி நாய் விரட்டி விரட்டி கடித்துக் குதறியதில் சிறுவன் தனது இடது கண்ணை இழந்தான்.
பரமக்குடி நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் பல வெறி பிடித்து அலைகின்றன.
இந் நிலையில் சலீம் என்ற சிறுவன் வெறி நாய்க்கு தனது கண்ணைப் பரிதாபமாகப் பறிகொடுத்துள்ளான். காதர்கனி என்பவரின் மகனான சலீம், சாலையில் நடந்து சென்றபோது ஒரு வெறி நாய் அவனை விரட்டியது.
பயந்து அவன் ஓட, அவனை விரட்டிச் சென்று கடித்தது அந்த நாய். இதில் சலீம் கீழே விழுந்தான். அப்போதுஅவனது முகத்திலும் அந்த நாய் கடித்தது. அதில் அவனது இடது கண்ணில் நாயின் பல் குத்தியது. இடதுகண்ணையே பல்லால் கடித்து குதறிக் கொண்டு போய்விட்டது அந்த வெறி நாய்.
இதையடுத்து அவன் உயிர் துடிக்க கதறினான். கண் குழியில் இருந்தும், முகம், உடலெங்கும் ரத்தம் வழியஉயிருக்கு மிக ஆபத்தான நிலையில் துடித்த சலீமை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அந்தச் சிறுவன் உயிர் தப்பிவிட்டான். ஆனால்,அவனது இடது கண் போய்விட்டதால் கண்ணிழந்து பரிதாபமாக இருக்கிறான் சலீம். அவனது வீட்டினரும்சோகத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
பரமகுடி நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக எத்தனையோ முறை புகார் கூறியும் நகராட்சிசார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பரமகுடியின் அரசியல் தலைவர்கள் அல்லது நகராட்சியின் மூத்த அதிகாரிகளை வெறி பிடித்த தெரு நாய்கள்விரட்டினால் ஒழிய நடவடிக்கை வராது போலிருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications