அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 1 மாதத்தில் மீண்டும் வேலை: கூறுகிறார் ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் வேலை கிடைக்கும்என்று என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறினார்.
காஞ்சிபுரத்தில் நேற்று ஜெயேந்திரரின் 69-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, மகாராஷ்டிர மாநில முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர்கலந்துகொண்டனர். பின்னர் ஜெயேந்திரருடன் ஜெயலலிதா சுமார் 45 நிமிடங்கள் தனியாக ஆலோசனைநடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், முதல்வர் ஜெயலலிதாவுடன் அரசியல் எதுவும்பேசவில்லை. இந்துக் கோவில்கள் சம்பந்தமாக இருவரும் பேசினோம். அயோத்தி குறித்து ஏதும் பேசவில்லை.
உலக அமைதிக்காக 12 நாள் யாகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களையும்அழைத்திருந்தோம். இறுதி நாளான இன்று (நேற்று) ஜெயலலிதாவும், சுஷில் குமார் ஷிண்டேவும் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் உள்ள கோவில்களை புதுப்பிப்பது குறித்து எனது தலைமையில் கமிட்டி ஒன்றை மாநில அரசுஅமைத்துள்ளது. கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து முதல்வரிடம் விளக்கினேன். தலித் கோவில்களுக்கு கூடுதல்மானியம் அளிக்குமாறு முதல்வரைக் கேட்டுக் கொண்டேன். சம்பந்தப்பட்ட தலித் கோவில்களின் பட்டியலைத்தருமாறு முதல்வர் என்னிடம் கேட்டுள்ளார்.
சென்னையில் உள்ள சீரணி அரங்கத்தை இடித்ததில் தப்பில்லை. அரசின் நடவடிக்கை சரியானதுதான்.
டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக கிறிஸ்தவ அமைப்புகளிடமிருந்து பிறந்த நாள் வாழ்த்து வந்துள்ளது.கிறிஸ்தவ மத போதகர்கள் பால் தினகரன், டிஜிஎஸ் தினகரன் ஆகியோர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளனர் என்றார் சங்கராச்சாரியார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications