தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் நன்கொடை வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடை வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவை குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றநீதிபதி தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும்உத்தரவிட்டுள்ளது.

அதே போல சிறுபான்மையினர் உள்பட தனியார் நடத்தும் அனைத்துத் தொழிற் கல்லூரிகளிலும் மேனேஜ்மெண்ட்கோட்டாவில் கீழ் 50 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே சேர்க்க வேண்டும் எனவும் மற்ற 50 சதவீத இடங்கள்அரசின் ஒதுக்கீட்டுக்கு தரப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் எத்தனை சதவீத இடங்கள் மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு உரியவைஎன்பது தொடர்பான வழக்கில் இந்த அதிரடித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

தலைமை நீதிபதி காரே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பின்விவரம்:

கல்லூரிகள் நடத்துவதாகக் கூறிக் கொண்டு யாரும் கொள்ளை லாபம் அடிப்படை ஏற்க முடியாது.சிறுபான்மையினர் நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள்அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்த இடங்களுக்கு அரசு தான் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும். மீதியுள்ள 50 சதவீத இடங்கள்தான் கல்லூரி நிர்வாகங்களுக்கு உரியவை. இந்த புதிய இட ஒதுக்கீட்டு முறை வரும் 2003-04 கல்வியாண்டில்இருந்து அமலுக்கு வரும்.

தங்கள் வசம் உள்ள நிர்வாகக் கோட்டாவில் மாணவ, மாணவிகளைச் சேர்க்கும்போது கல்லூரி நிர்வாகிகள்நன்கொடை வசூலிக்கக் கூடாது.

தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்துகண்காணிக்க அடுத்த ஆண்டு முதல் அனைத்து மாநில அரசுகளும் 5 நபர் கொண்ட கமிட்டியை அமைக்கவேண்டும். இந்தக் கமிட்டிக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை தலைவராக நியமிக்க வேண்டும்.

அதே போல எத்தனை இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் அரசிடம் தந்துள்ளன, எத்தனை இடங்களை தங்களதுமேனேஜ்மெண்ட் கோட்டாவின் கீழ் ஒதுக்கிக் கொண்டன என்பதைக் கண்காணிக்கவும் 4 பேர் கொண்டஇன்னொரு உயர் மட்டக் கமிட்டியை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். இந்தக் கமிட்டியின் தலைவராகவும்ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.

இந்த நீதிபதிகளை மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி தான் நியமிக்க வேண்டும்.

விதிமுறையை மீறும் கல்லூரியின் அங்கீகாரத்தை மாநில அரசுகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்குத்தேவைப்படும் மிகக் கடுமையான, புதிய விதிமுறைகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் நடத்துவது சமூக நலத்தின் அடிப்படையில் தானே தவிர, லாபம் ஈட்டுவதற்காக அல்லவேஅல்ல.

கல்லூரிகளில் கட்டண வசூல் குறித்து கண்காணிக்கும் 5 பேர் கொண்ட கமிட்டியில் பிரபலமான ஒரு சார்ட்டர்ட்அக்கெளண்டன்ட், ஒரு டாக்டர் அல்லது ஒரு என்ஜினியர், மாநில தொழில்நுட்பக் கல்வித்துறைச் செயலாளர்,முக்கியப் பிரமுகர் ஆகியோரும் இடம் பெற வேண்டும்.

தனியார் கல்லூரிகளில் உள்ள லேப் வசதிகள், ஊழியர்களுக்குத் தரப்படும் ஊதியம், கல்லூரியின் தரத்தைப்பொறுத்துத் தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதை இந்தக் கமிட்டி உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களிடம் இருந்து கிடைக்கும் கட்டணத்தில் மீதம் இருக்கும் தொகையே வேறு எந்தப் பணிக்கும் கல்லூரிசெலவிடக் கூடாது. மாணவர்களின் நலனுக்கே செலவிட வேண்டும்.

அடுத்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு கல்லூரியும் தனது கட்டண விவரத்தை கமிட்டியிடம் முன் கூட்டியே தெரிவிக்கவேண்டும். அதை கமிட்டி ஆராய்ந்து பின்னர் கட்டணத்தை நிர்ணயிக்கும். இக் கட்டணம் அடுத்த 3 ஆண்டுகளுக்குஉயர்த்தப்படக் கூடாது.

சிறுபான்மையின கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது அந்தந்த இன, மொழி சிறுபான்மையினருக்குமுதலிடம் தரலாம். இந்த உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், அந்தக் கல்லூரிகளில் எத்தனை இடங்கள்மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு உரியது என்பதை கமிட்டி தான் முடிவு செய்யும். இந்த எண்ணிக்கை 50சதவீதத்தை தாண்டவே கூடாது.

மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு மாணவர்கள், மாணவிகளை சேர்க்கவும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+